மனைவி மற்றும் மகன் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நெத்தியடி பதில் கொடுத்த தளபதி விஜய்!

தளபதி விஜய் தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தை தன் வசப்படுத்தி இருக்கும் தளபதி விஜய் சமீபத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த மாதம் வெளியான இந்த லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் உலக அளவில் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.

லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பில் முதல் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதில் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகர் பிரபுதேவா இருவரும் தளபதி விஜய் உடன் இணைந்து பாடியுள்ளனர். அதை தொடர்ந்து சவுத் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தாய்லாந்தில் இந்த படத்தின் சண்டை காட்சிகள் காட்சிகள் படமாக்க உள்ளதாக இயக்குனர் மாஸ் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் தளபதி விஜய் ரசிகர் மன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். பிரபலத்தின் உச்சியில் இருக்கும் தளபதி விஜய் அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கம். அந்த வகையில் விஜய் தனது மனைவி சங்கீதா அவர்களைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இருவருக்கிடையே விவாகரத்து கிடைத்துள்ளதாகவும் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அதேபோல் தளபதி விஜய்க்கும் அவர் மகன் ஜேசன் சஞ்சய் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அது மட்டுமல்லாமல் தளபதி விஜய் கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருப்பதாகவும், அதை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் போது நடிகை திரிஷாவுடன் லிவிங்கில் வாழ்ந்து வருவதாகவும் பல தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. இந்த சர்ச்சைகள் விஜயின் திரை வாழ்க்கையை மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையையும் பெரிதும் பாதிக்க வாய்ப்புள்ளது. அப்படி இருந்தும் விஜய் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்த பிக் பாஸ் புகழ் ஜனனி விஜயின் குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு ரகசிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். லியோ படப்பிடிப்பின் போது நடிகை ஜனனியுடன் பேசிய தளபதி விஜய், நீங்கள் பார்ப்பதற்கு என் மனைவியின் அக்கா போல் உள்ளதாகவும் உங்களைப் போன்று தான் என் மனைவியும் அமைதியான குணம் படைத்தவர், அதிகமாக பேசுவதும் இல்லை என்று தன் மனைவியை பற்றி பெருமையாக கூறியிருக்கிறார்.

உருவ கேலி குறித்து தீர விசாரிக்க வேண்டும் என கமலிடம் வேண்டுகோள் வைக்கும் வினுஷா தேவி!

அதை எடுத்து அவரின் மகன் சஞ்சய் குறித்து கூறும் பொழுது, என் மகனுக்கு இசையில் அதிக ஆர்வம் உள்ளது. அவர் ஒரு பாடலை இயக்கி யூடியூபில் ரிலீஸ் செய்துள்ளார். அது குறித்து முதலில் எனக்கு தெரியாது அதன் பின் என் மகன் என்னிடம் தெரியப்படுத்தி என் பாடல் எப்படி என கேட்டான். அந்த அளவிற்கு அவனுள் பல திறமைகள் ஒளிந்து இருக்கிறது என தன் மகன் பற்றியும் பெருமையாக ஜனனியிடம் கூறியிருக்கிறார் தளபதி விஜய் .

நடிகை ஜனனி லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல யூடியூப் சேனல்களுக்கு அளித்து வரும் பேட்டியில் இந்த தகவலை கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...