ஜெயிலர் படத்திற்க்கு போட்டியாக ஸ்கெச் போடும் தளபதி விஜய்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிக்கொடி கட்டி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சினிமா ரசிகர்கள் எல்லாருமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் தான் விஜய் நடித்த லியோ திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளை அலங்கரிக்க உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்த படத்தின் ஆடியோ வெளியீடு எப்போது நடக்கும் என ரசிகர்கள் பயங்கரமாக எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடக்க உள்ளதாக தகவல் கசிந்தது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக விஜய் ரசிகர்கள் மலேசியாவில் விழா நடத்தினாலும் மீண்டும் தமிழ் நாட்டிலும் ஆடியோ லான்ச் நடித்த வேண்டும் என தனது ஆசைகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த கருத்திற்கு எந்த ஒரு பதிலும் வெளியிடாமல் லியோ பட குழு ரொம்பவே மௌனம் காத்திருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் உச்சம் தொட்ட வெற்றியை பார்த்து லியோ படக்குழு சற்று மிரண்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தளபதி விஜய் அவர்கள் தந்திரமான ஒரு முடிவை எடுத்து லியோ படத்தின் ஆடியோ லான்ச் மலேசியாவில் வைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்தலாம் என்ற ஒரு யோசனையிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தளபதி விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கான காரணம் லியோ படத்தை பெரிய அளவில் பிரமாண்டமாக வெற்றி பெற வைத்தாக வேண்டும் என்ற ஒரே காரணம் தான். மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி தற்போது எங்கு திரும்பினாலும் ஆரவாரமாக பேசப்பட்டு கொண்டாடி வருவதால்
விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஆடியோ லான்ச் அப்டேடை தெறிக்க விட வேண்டும் என படக்குழு நினைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் லியோ படத்தின் ஆடியோ லான்ச் தமிழ்நாட்டில் நடத்தினால் தமிழக ரசிகர்களையும் குஷிப்படுத்தி விடலாம், மேலும் இந்த ஒரு அப்டேட் வைத்து வேற எல்லாம் அப்டேட்டையும் தகர்த்து விடலாம் என முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கல்யாணிக்கு இப்படி ஒரு நிலைமையா?

மேலும் ரசிகர்களை மகிழ்விப்பதற்க்காக ஒரு குட்டி ஸ்டோரி தாயாராகி வருவதாகவும், இந்த குட்டி ஸ்டோரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை தாக்கியும் ஒரு சில விஷயங்கள் சொல்லப் போவதாக சினிமா சுற்று வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என நாம் ஆடியோ லான்ச் வரை காத்திருக்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...