ரீடேக் வாங்கிக் கொண்டே இருந்த விஜய் : கன்ட்ரோல் பண்ணவே முடியலையாம்.. அப்படி எந்த சீன் அது?

தமிழ் சினிமா காமெடிகளில் கவுண்டமணி – செந்திலுக்கு எப்படி ஒரு வாழைப்பழ காமெடி காலத்திற்கும் பேசுகிறோமோ அதேபோல் வடிவேலுவுக்கும் நிலைத்து நிற்கும் காமெடி சீன்களில் ஒன்று ப்ரண்ட்ஸ் நேசமணி கதாபாத்திரம். வடிவேலுவின் காமெடிக்காகவே இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

கடந்த 2001-ல் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயாணி, வடிவேலு, சார்லி நடிப்பில் வெளிவந்து 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்ற படம் ப்ரண்ட்ஸ். மலையாள இயக்குநர் சித்திக் இப்படத்தை இயக்கியிருந்தார். நேருக்கு நேர் படத்திற்குப் பின் சூர்யாவும்-விஜய்யும் இதில் இணைந்து நடித்திருந்தனர். இளையராஜா இசையில் பாடல்களும் மனதை வருடின.

இப்படத்தில் வரும் கான்ட்ராக்டர் நேசமணியை இப்பொழுதும் கொண்டாடி வருகிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட #prayfornesamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியது நினைவில் இருக்கலாம். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் ப்ரண்ட்ஸ் படத்தின் காட்சி ஒன்றில் விஜய் அதிக முறை ரீடேக் வாங்கியதாக வடிவேலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவரா? 3500 சம்பளத்தில் ஆரம்பித்த வெற்றிப் பயணம்

அதன்படி காட்சி ஒன்றில் வடிவேலுவின் மேல் கருப்பு நிறத்தில் பெயிண்ட் அனைத்தும் கொட்ட அவர் உருவமே மாறி மிகக் கருப்பாகக் காட்சியளிப்பார். இதைப்பார்த்து அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பர். ஒரு கட்டத்தில் அனைவரின் சிரிப்பும் அடங்க ஆனால் விஜய்யோ அவரைப் பார்த்து மீண்டும் மீண்டும் சிரிப்பார். இந்தக் காட்சியில் விஜய் நடிக்கும் போது அவரால் நடிக்கவே முடியவில்லையாம். சிரிப்பின் உச்சத்திற்கே போய்விட்டாராம். அதிக முறை ரீ டேக் வாங்கி இந்தக் காட்சியில் விஜய் நடித்தார் என்று வடிவேலு கூறியிருக்கிறார்.

உண்மைதான். இந்தக்காட்சி காண்பவரை சிரிப்புக் கடலில் ஆழ்த்தும். பார்க்கும் நமக்கே சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது என்றால் நடித்தவர்களுக்கு எப்படி இருக்கும்.

விஜய்-வடிவேலு காம்பினேஷனில் வந்த பகவதி, போக்கிரி, வில்லு, சுறா, மதுர, சச்சின், மெர்சல், வசீகரா போன்ற படங்களில் மெர்சல் தவிர்த்து மற்ற அனைத்துப் படங்களிலும் காமெடியில் கலக்கியிருப்பர். இவர்கள் காம்போவில் சுறா தவிர மற்ற அனைத்துப் படங்ளும் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்தவை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...