இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் இவரா? 3500 சம்பளத்தில் ஆரம்பித்த வெற்றிப் பயணம்

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் திரை நட்சத்திரங்கள் பட்டியலில் ஜாக்கிசானும், இந்திய அளவில் ஷாரூக்கான், அமிதாப் பச்சன், ரஜினி, சல்மான் கான், விஜய், அஜீத் கமல்ஹாசன், அக்சய் குமார் ஆகியோரும் இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தீபகா படுகோனே ஆவார்.

உலகின் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக வலம் வருகிறார் பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனே. பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனையான இவர் மாடலிங் துறையின் மீது கொண்ட மோகத்தால் திரைத்துறைக்கு வந்தார். ஆனால் அதற்கு முன்  விளம்பர மாடலாக நடித்துக் கொண்டிருந்தார். லிரில் சோப் விளம்பரம் இன்றும் 90’s கிட்ஸ்களை தீபிகா படுகோனேவை ஞாபகப்படுத்தும்.

கன்னடத்தில் முதன்முதலில் ஹீரோயின் வாய்ப்பு வந்தது. உபேந்திராவுடன் ஐஸ்வர்யம் என்ற படத்தில் நடித்தார். படம் சுமாரான வெற்றியைப் பெற இந்திய சினிமா உலகில் கால் பதித்தார். அதன்பின் ஷாரூக்கான் நடிப்பில் இந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் தீபிகா படுகோனேவின் புகழை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்து ஹாலிவுட் வரை கால் பதிக்க வைத்தது.

லோகி கேரக்டருக்கு பொருத்தமானவர் ஷாருக்கான்!! டாம் ஹிடில்ஸ்டன்

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் இந்திய சினிமாவுலகில் தவிர்க்க முடியாத நாயகியாகிவிட்டார் தீபிகா. தொடர்ந்து அனைத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் நடித்தார்.

இவரது புகழும் வளர கூடவே இவரது மார்க்கெட்டும் எகிறியது. ஆரம்பத்தில் 3500 ரூபாய் சம்பளத்தில் மாடலிங் துறையில் இருந்தவர் மளமளவென புகழின் உச்சிக்குச் சென்று இப்போது இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதன்மையாகத் திகழ்கிறார். ஒரு படத்திற்கு இவரது சம்பளம் 17 முதல் 20 கோடி வரை நீள்கிறது.

சமீபத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி 1000 கோடி கிளப்பில் இணைந்த ஜவான் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்ததற்காக இவர் பெற்ற சம்பளம் ஹீரோயின் நயன்தாராவை விட அதிகம். நயன்தாரா 11 கோடி வாங்கிய நிலையில் தீபிகா 20 கோடி வரை பெற்றாராம்.

இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலவதாக இருந்த ஐஸ்வர்யா ராயை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.  தற்போது இந்த வரிசையில் கோடிகளில் வாங்கும் நடிகைகளாக ஆலியாபட், ஜான்விகபூர், கியாரா அத்வானி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...