டைம் டிராவல் கதையில் தளபதி விஜய்? : வெளியான தளபதி 68 அப்டேட்

லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து தளபதி 68 படத்தின் ஷுட்டிங் பணிகளில் பிஸியாகி விட்டார் நடிகர் விஜய். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். புதிய கீதை படத்திற்குப் பின் யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு இசையமைக்கிறார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளது. ஏற்கனவே வெங்கட்பிரபு அஜீத்தை வைத்து இயக்கிய மங்காத்தா படம் வரலாறு காணாத வெற்றியைக் கொடுத்தது.

இந்நிலையில் தளபதி 68 படமும் தல அஜீத்க்கு வந்தது போல் மாஸ் படமாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தளபதி 68 படத்தில் மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடிக்க பெரும் திரைப்பட்டாளமே இணைந்துள்ளது. டாப்ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, யோகி பாபு, லைலா, அஜ்மல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

தற்போது இப்படத்தின் ஷுட்டிங் தாய்லாந்தில் மளமளவென நடந்து வருகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் கதை குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தில் விஜய் தந்தை மகன் என இருவேடங்களில் நடிப்பதாகவும், 50 வயது, 25 வயது தோற்றத்தில் நடிக்கும் விஜய்யை AI தொழில்நுட்பம்  மூலம் இளமையாகக் காண்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் இப்படம் டைம் டிராவலை மையமாகக் கொண்ட கதைக் களமாகவும் உள்ளதாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

என்னது..! பிரபுதேவா டான்ஸ் ஆட அணியும் ஷு விலை ஒரு லட்சமா? உண்மை உடைத்த பிரபுதேவா

இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். ஏற்கனவே அழகிய தமிழ்மகன், மெர்சல்,  கத்தி, பிகில் போன்ற படங்களில் இரட்டைவேடம் ஏற்று நடித்த விஜய் இப்படத்திலும் தந்தை மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

மேலும் டைம்டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு மார்க் ஆண்டனி போன்ற படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருப்பதால் விஜய்யும் இந்தக் கதைக்கு ஓகே சொல்லி நடித்திருக்கிறார். எப்படி சூப்பர் ஸ்டாருக்கு அண்ணாமலையில் ஒரு பிஜிஎம், மங்காத்தாவில் அஜீத்துக்கு பிஜிஎம் என டிரேட் மார்க் ஆக அமைந்து விட்டதோ அதேபோல் விஜய்க்கும் யுவன் இந்தப் படத்தில் காலத்திற்கும் நிற்கும் தரமான பிஜிஎம் தருவார் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.