என்னது..! பிரபுதேவா டான்ஸ் ஆட அணியும் ஷு விலை ஒரு லட்சமா? உண்மை உடைத்த பிரபுதேவா

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படும் நடன இயக்குநர் பிரபுதேவா தனது நடன அசைவுகளால் இந்தியா மட்டுமல்ல உலக அளவில் இரசிகர்களை பெற்றிருக்கிறார். இதயம் படத்தில் ‘ஏப்ரல் மேயிலே‘ என்ற பாடல் மூலம் தனது நடனத் திறமையை நடிப்பிலும் காட்ட தொடர்ந்து சூரியன் படத்தில் லாலாக்கு டோல் டப்பிம்மா பாடலில் கவனிக்க வைத்தார். வால்டர் வெற்றிவேல் படத்தில் சுகன்யாவுடன் சின்ன ரோசாவே பாடல் இவர் புகழ் பரப்பியது.

பின் ஜென்டில்மேன் திரைப்படத்தில் வந்த சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடல் மூலம் இந்திய அளவில் கவனிக்க வைத்தார் பிரபு தேவா. முன்பே ஹீரோவாக நடித்திருந்தாலும்  இயக்குநர் ஷங்கரின் காதலன் படம் இவருக்கு நிலையான ஹீரோ அங்கீகாரத்தைக் கொடுக்க தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்தார். தளபதி விஜய்யை வைத்து போக்கிரி என்ற மெகா ஹிட் படம் எடுத்து இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.

மின்சாரக் கனவு படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே.. வெண்ணிலவே பாடலுக்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதையும் பெற்றார் பிரபுதேவா. இவரின் திறமைகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இப்படி நடனம், நடிப்பு, இயக்கம் என மூன்று துறையிலும் சாதித்து வரும் பிரபுதேவாவைப் பற்றி ஒரு வதந்தி இருந்தது. அதாவது அவர் நடனம் ஆடும் போது பயன்படுத்தும் ஷுவின் விலை ஒரு இலட்சம் என்று கூறப்பட்டது. இதற்கு அவரே அண்மையில் பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பூ : ஹன்சிகாவின் இளமை ரகசியம் இதான்

தான் நடனம் ஆடும் போது ஒரே ஒரு ஷுவைத் தான் பயன்படுத்தி வருகிறேன் என்றும், வெகு நாட்களாக அதான் பயன்பாட்டில் உள்ளது என்றும் அதன் விலை நீங்கள் கூறுவது போல் ஒரு இலட்சம் இல்லை வெறும் 250 ரூபாய்தான் என்றும் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஷு தான் பொது இடங்களுக்குச் செல்லும் போதும் பயன்படுத்தி வருவதாகவும், படங்களில் பயன்படுத்துவது தயாரிப்பு தரப்பில் இருந்து தருவது என்றும் அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் பிரபுதேவா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews