’தளபதி 67 படத்தின் சூப்பர் அறிவிப்பு.. இவங்கல்லாம் படத்துல இருக்காங்களா?

தளபதி விஜய் நடித்துவரும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு கடந்து சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த பணத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜனவரி 2ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் வாரிசு படத்தின் ரிலீஸ்க்கு பின்னர் தான் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் லலித் மற்றும் ஜெகதீஷ் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும், கத்தி, மாஸ்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்கு அடுத்து நான்காவது முறையாக விஜய் அனிருத் இணைகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை அறிவித்துள்ள பட குழுவினர் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களை விவரங்கள் பின்வருமாறு:

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்

சண்டை பயிற்சியாளர் அன்பறிவ்

நடன இயக்குனர் தினேஷ்

கலை இயக்குனர் சதீஷ்குமார்

வசன எழுத்தாளர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...