தளபதி 68 படத்தில் விஜய்க்கு தங்கச்சியாகும் வாய்ப்பை தவறவிட்ட இவ்வானா! தட்டிப்பறித்த சுந்தர் சி பட ஹீரோயின்!

தளபதி விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அதாவது அப்பா, மகன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்து வருவதாகவும், அதிலும் அப்பா கதாபாத்திரத்திற்கு ஃபிளாஷ்பேக் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த பிளாஷ்பேக் காட்சிகளில் மிகவும் இளமையான விஜய் நடிக்க இருப்பதாகவும் அதற்காக அமெரிக்காவில் ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக இளமையான விஜயை நேர்த்தியாக படங்களில் இணைக்க வெங்கட் பிரபு முயற்சி செய்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

அதை தவிர்த்து படத்தில் முன்னணி நடிகை லைலா மற்றும் சினேகா இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் தளபதி 68 படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி என பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் காமெடியனாக யோகி பாபு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் கஞ்சா கருப்பு தளபதி 68 படத்தில் இணைய உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தளபதி விஜயுடன் இணைந்து சிவகாசி, அழகிய தமிழ் மகன் இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 படத்தில் கஞ்சா கருப்பு இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

களவாணி, சுப்பிரமணியபுரம், சண்டக்கோழி என மிகப் பெரிய ஹிட் படங்களில் காமெடியனாக வலம் வந்த கஞ்சா கருப்பு அதைத்தொடர்ந்து படங்கள் தயாரிப்பதில் களமிறங்கி தோல்வியை சந்தித்தார். அதன் பின் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலம் அடைந்தார். தற்பொழுது தளபதி 68 படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்றும் அதற்கான நாள் ஒதுக்கீடு குறித்து இனி தகவல் வெளியாகும் என்றும் பேட்டி ஒன்றில் கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சுதீப் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இறுதியாக வெளியான கஸ்டடி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சுதீப் அவர்களை ஹீரோவாக வைத்து வெங்கட் பிரபு ஒரு படம் இயக்குவதாக இருந்தது. அதற்குள் தளபதி 68 படம் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தளபதி 68 படத்தில் சுதீப் இணைந்துள்ளாரா என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் தளபதி 68 திரைப்படம் பான் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதால் மல்டி ஸ்டார்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரிலீசுக்கு முன்பே 250 கோடி பிசினஸ் செய்த அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம்!

குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் தளபதி 68 படத்தில் தங்கச்சி கதாபாத்திரம் ஒன்று இருப்பதாகவும், இந்த கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனையாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமடைந்த ஹீரோயின் இவானா முதலில் கமிட் செய்யப்பட்டிருந்தார். சில காரணங்களினால் நடிகை இவானா இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இதுபோன்ற துணை வேடங்களில் நடிக்கும் பொழுது அது போன்ற கதாபாத்திரமே தமக்கு மீண்டும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி தளபதி 68 படத்தின் வாய்ப்பை மறுத்துள்ளார்.

அதை தொடர்ந்து இந்த படத்தில் யார் அந்த தங்கச்சி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான காபி வித் காதல் திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் காதலியாக நடித்த மாளவிகா சர்மா தளபதி 68 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படத்திலும் இது போன்ற தங்கச்சி சென்டிமென்ட் காட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.