வெற்றிமாறன் இயக்கத்தில் தல அஜித்! ஏ கே 64 படம் குறித்த மாஸ் அப்டேட்!

இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் இது பிரம்மாண்டமாக வெளியாகி மிக பெரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தற்பொழுது தனது 62வது திரைப்படம் ஆன விடாமுயற்சி திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இந்த உருவாகும் இந்த திரைப்படத்தை நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

விடாமுயற்சி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜானில் டிசம்பர் 4ஆம் தேதி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக முடிவடையும் பட்சத்தில் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 63 வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

திரிஷா அல்லது நயன்தாரா படத்தின் மூலமாக இயக்குனர் ஆக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் சக நடிகராக நடித்திருந்தார். அந்த படத்தின் போது ஏற்பட்ட நட்பு காரணமாக நடிகர் அஜித்தை சந்தித்து கதை கூறியுள்ளார் அந்த கதைக்கு அஜித் ஓகே சொல்லவும் இந்த படத்திற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தனது 64வது திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய ஒன் லைன் ஸ்டோரிக்கு நடிகர் அஜித் ஓகே சொல்லியதாகவும் கூறப்படுகிறது.

தலைவர் 171 படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது விடுதலை 1 படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார். விடுதலை படத்தை தயாரித்த ஆர் எஸ் இன்ஃபோடெக் தான் அஜித் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. கமர்சியல் படமாக இல்லாமல் சிறந்த கதையம்சம் கொண்ட படத்தில் நடிகர் அஜித் நடிக்க ஆர்வமாக இருந்ததால் வெற்றிமாறன் கதைக்கு சம்மதித்ததாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.