மாணவர் வீடு தீப்பிடித்து சேதம்.. உதவிக்கரம் நீட்டிய ஆசிரியர்கள் சக மாணவர்கள்..!

திருப்பூர் அருகே மாணவர் ஒருவரது வீடு எரிந்து சேதமடைந்ததை அடுத்து அவரது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டி உள்ள தகவல் வெளியாகியுள்ளன.

திருப்பூரைச் சேர்ந்த சந்தியா, இளங்கோவன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களது வீடு எரிந்து வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் தீயில் சேதம் ஆகிவிட்டது.

இது குறித்து சந்தியா மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரும் தங்களது பள்ளியில் மிகவும் சோகத்தோடு இதை கூற உடனடியாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து நிதி திரட்டினார்.

ரூபாய் 18000 மற்றும் வீட்டுக்கு தேவையான பத்தாயிரம் மதிப்புள்ள சமையல் பொருட்களை வாங்கி சந்தியா மற்றும் இளங்கோவனின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்த தகவல் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் உதவி செய்த் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews