“மாதம் ரூ.3 லட்சம் வர்த்தகம்”… கருவாடு பிசினஸில் கலக்கும் ராமநாதபுரம் இளைஞர்கள்!

ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த பள்ளி தோழர்கள் இருவர் ஒன்றாக இணைந்து தங்களது நீண்ட நாள் கனவான சொந்த தொழிலில் லாபம் ஈட்டி வருகின்றனர்.

ஐ.டி. வேலை டூ கருவாடு விற்பனை:

கலைகதிரவனும், கிருஷ்ணசாமியும் பள்ளி நண்பர்கள். 2009ம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பை முடித்த இருவருக்கும் சென்னையில் வேலை கிடைத்துள்ளது. இருவரும் ஒரே அறையில் தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளனர். கொஞ்ச காலத்திற்கு பிறகு, நண்பர்கள் இருவரும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது நண்பர்களில் ஒருவருக்கு கடலூரிலும், மற்றொருவருக்கு பெங்களூருவிலும் வேலை கிடைத்துள்ளது. வேலை நிமித்தமாக இருவரும் பிரிய வேண்டி இருந்த சமயத்தில், சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு சென்று தங்களது சொந்த தொழிலை தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.

இருவரது கனவையும் நிறைவேற்றுதற்காக முதலில் கலைக்கதிரவன் ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ளார். அங்கு சென்றதும் மற்ற ஐ.டி. ஊழியர்கள் அல்லது பொறியியல் பட்டதாரிகள் செய்வது போல் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலை கலைக்கதிரவன் தொடங்கவில்லை. ஒட்டுமொத்த ஊர் மக்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆச்சர்யப்படும் வகையில், கருவாடு விற்பனையைத் தொடங்கினார்.

‘லெமூரியன் பஜார்’ தொடக்கம்:

கருவாடு வர்த்தகத்தை தொடங்க வேண்டும் என்பது நண்பர்களின் திடீர் முடிவு அல்ல, கடலூர் கழிவுநீர் மேலாண்மை நிறுவனத்தில் கலைகதிரவனும், பெங்களூருவில் உள்ள ஃபயர்வால் நிறுவனத்தில் கிருஷ்ணசாமியும் பணியாற்றும் போதே இந்த முடிவை எடுத்துள்ளனர். அத்தோடு தாங்கள் தொடங்க உள்ள வணிக நிறுவனத்திற்கு ‘லெமூரியன் பஜார்’ என்ற பெயரையும் தேர்வு செய்து வைத்துள்ளனர்.

2019-ம் ஆண்டு கலைகதிரவன் கடலூரில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு ராமநாதபுரம் திரும்பினார். இரண்டு வருடங்கள் கழித்து கிருஷ்ணசாமி அவருடன் சேர்ந்தார். ஆனால் கிருஷ்ணசாமி ஐடி வேலையை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். ஆனால் கிருஷ்ணசாமியின் குடும்பத்தினர் மிகவும் பயந்துள்ளனர்.

கருவாடு விற்பனைக்காக வேலையை விட்டுவிட்டால் யாரும் திருமணத்திற்கு பெண் தரமாட்டார்கள் என பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர். எனவே கிருஷ்ணசாமி திருமணம் வரை வேலையை விடாமல் இருந்துள்ளார். திருமணமாகி ஆறு மாதங்கள் ஆன நிலையில் மனைவி மற்றும் பெற்றோரின் சம்மதத்துடன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, நண்பனுடன் சேர்ந்து வியாபாரத்தில் இறங்கியுள்ளார்.

வாசனை இல்லாமல் கருவாட்டை சுத்தமான முறையில் பார்சல் செய்து மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் நண்பர்கள் இருவரும் தரமான கருவாட்டை தேடி அலைந்துள்ளனர். கடைசியாக பாம்பன் மீனவர்கள் மூலமாக தரமான கருவாடு கிடைத்துள்ளது.

கருவாட்டை காற்று புகாத கொள்கலன்களில் அடைக்க 10 பேர் கொண்ட மகளிர் சுயஉதவிக்குழு தேர்வு செய்யப்பட்டது. QR குறியீடுகள் உருவாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்களுக்கு லெமூரியன் பஜாரின் ஆய்வகச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்கள் தயாரிப்புகளை அமேசானில் விற்கத் தொடங்கியுள்ளனர்.

மாத வருமானம் எவ்வளவு?

இப்போது மாதம் 3 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்து வருகின்றனர். தற்போது மதுரை ஜங்கஷனில் பூக்கடைகளுக்கு அருகே கடல் தீமில் அழகான ‘உலர்ந்த மீன் குடில்’ என்ற பெயரில் கடையை அமைத்துள்ளனர்.

லெமூரியன் பஜார் உலர் மீன் குடில் 100 முதல் 400 வரை 30 வகையான உலர் மீன்களை விற்பனை செய்கிறது. நெத்திலி முதல் சுறா மற்றும் ஸ்டிங்ரே வரை பல வகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. உலர் மீன்கள் உப்பு மற்றும் உப்பு சேர்க்காமல் விற்கப்படுகின்றன. ஏற்கனவே மாதம் 15 லட்சத்தை எட்டியுள்ளது.

இரண்டு நண்பர்களும் முதல் வருடத்திலேயே 2 கோடி வியாபாரத்தை எட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருவரின் தனிப்பட்ட முதலீட்டுடன் சேர்த்து, விளம்பரதாரர்கள் நபார்டு வங்கியிடமிருந்து சுமார் 25 லட்சம் வரை முதலீடு செய்துள்ளனர். விற்பனை அதிகரித்து வருவதால் விரைவில் பல்வேறு இடங்களிலும் கடைகளை திறக்க நண்பர்கள் முடிவு செய்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews