13 நகரங்களில் சதமடித்த வெயில்.. இனி தமிழ்நாட்டில் கொளுத்தபோகும் அக்னி..!

தமிழ்நாட்டில் நேற்று 13 நகரங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்ததை எடுத்து இனிவரும் நாட்களில் தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் அக்னி வெயில் உச்சத்தை அடையும் என்று கூறப்படுகிறது.

மே நான்காம் தேதி முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது என்பதும் அன்றைய தேதி முதல் வெயில் கொளுத்தி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒரு சில பகுதிகளில் மழை பெய்தாலும் சென்னை உள்பட வட மாவட்டங்களில் கடுமையாக வெயில் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று புயல் கரையை கடந்ததை அடுத்து மீண்டும் வெயில் உக்கிரத்தை அடைந்துள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் உள்ள 13 நகரங்களில் அதாவது சென்னை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.

சென்னையில் நேற்று விட இன்று அதிக வெப்பம் இருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மிக அதிகமான வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மே 28ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் இருப்பதால் அதுவரை பொதுமக்கள் அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்டிப்பாக 12 மணி முதல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் வெயில் காலத்தில் நீர் ஆகாரங்களை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று பழங்கள் மற்றும் நீர்ச்சத்துள்ள காய்கறிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews