இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும்: அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய்?

  அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் கட்சியை இணைக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யும் அதற்கு கிட்டத்தட்ட சம்மதித்து விடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக ஒரு மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இருந்தாலும்,…

vijay admk

 

அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய் கட்சியை இணைக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யும் அதற்கு கிட்டத்தட்ட சம்மதித்து விடுவார் என்று கூறப்படுகிறது. பாஜக ஒரு மதவாத கட்சி என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், இப்போதைக்கு திமுகவை தோற்கடிக்க வேண்டும், தமிழக மக்களை திமுகவின் அராஜக ஆட்சியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதுதான் விஜயின் குறிக்கோளாக உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இதனால், திமுகவை தோற்கடிக்க விஜய், அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்தால் கூட ஆச்சரியப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுக, பாஜக, மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய மூன்று கட்சிகள் உள்ள கூட்டனியில் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம், கிட்டத்தட்ட சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

இரு கட்சிகளில் எந்த கட்சிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கிறதோ, அந்த கட்சிக்கு முதல்வர் பதவியும், இன்னொரு கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் கிடைக்கும் வகையில் இப்போதைக்கு முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக-பாஜக-தமிழக வெற்றி கழகம் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்தால், கண்டிப்பாக இந்த கூட்டணி வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணிக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் மக்களை பொருத்தவரை, அவர்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறார்கள் என்பது யாராலும் கணிக்க முடியாது என்பதால், தேர்தல் முடிவு ரிசல்ட் வந்தால் மட்டுமே அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்பது தெரியவரும்.