தற்போதைய சூழ்நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாக இருப்பது போலவே தெரிகிறது. மேலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதோடு, தமிழக வெற்றி கழகத்தையும் இணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகினால் தான், விஜய் தரப்பு அந்த கூட்டணியில் இணைய தயாராக இருக்கிறார் என்பது ஒரு முக்கிய திருப்பமாக காணப்படுகிறது.
இந்த நிபந்தனைக்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்வாரா? அல்லது அதிமுக-பாஜக கூட்டணியில் சமரசம் செய்து விஜய் அந்த கூட்டணியில் இணைவாரா? என்பதெல்லாம் காத்திருக்க வேண்டிய விடயமாகியுள்ளது.
விஜய்யின் நிபந்தனைக்கு ஈபிஎஸ் ஒப்புக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் மதவாதம் பெரிதாக ஏற்படாது என்பதால், பாஜகவுடன் சேர்ந்து முதலில் திமுகவை தோற்கடிக்க வேண்டுமென விஜய் முடிவு செய்திருக்க வாய்ப்பு உள்ளது. தற்போது வரை விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்திருக்கவில்லை என்றாலும், அவர் இணைய மாட்டார் என உறுதி கூற முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இறுதியாக, அதிமுக-பாஜக-தவெக கூட்டணியாக இருந்தாலும், அல்லது அதிமுக-விஜய் கூட்டணியாக இருந்தாலும், திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வலிமை இந்த கூட்டணிக்கு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.