தமிழக முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசியதன் சுருக்கம்:
அதாவது, திமுகவுல இருக்கிற இன்னொரு ஒரு மூத்த உறுப்பினர், அவர் பேசும்போது சொல்றாரு… என்னன்னா, அதாவது மக்கள் அவங்க கட்சிக்கு ஓட்டு போடாதனால, அந்த மக்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதாம்!
எனக்கு சத்தியமா புரியல… அதாவது, இத்தனை வருஷமா… இந்த 50 அல்லது 60 வருஷமா இதே மக்கள் தான் அவங்களுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தாங்க. அந்த மக்களை பார்த்து எப்படி அந்த வாயில இருந்து ஒரு வார்த்தை வருதுன்னு என்னால அதை நினைச்சு பார்க்கவே முடியல!
அதான், மக்கள் தீர்ப்பை ஏத்துக்க முடியாத அந்த மனசு எப்போ இல்லையோ, இவங்கெல்லாம் ஏன் அரசியல்ல இருக்கணும்ன்ற அந்த கேள்வி தானே வரும்? மக்கள் தீர்ப்பை கொஞ்சமாவது மதிக்கணும்.
இது எல்லாத்தையும் விட… இது எல்லாத்தையும் விட கொடுமை என்ன தெரியுமா? இந்த ஆபாச நதி, வன்ம நதி பேச்சுகளை, இங்க பல வருஷமா, பல ஆண்டுகளா அரசியல்ல இருக்கிற பெரியவர்கள் எல்லாம் என்ன சொல்றாங்க தெரியுமா? ‘இதுல என்ன தப்பு இருக்கு? நாங்க அந்த காலத்துல பேசாத பேச்சா?’ அப்படின்றாங்க.
அது உங்களுக்கு தப்புன்னே தெரியல… அதை அவங்க நியாயப்படுத்திக்கிறாங்க! ஐயா பெரியவர்களே, அந்த காலத்துல இருக்கிற, அரசியல்ல இருக்கிற நல்லதை மட்டுமே எடுத்துப்போம். எதுக்கு இந்த அவதூறா, அசிங்கமா பேசுற அரசியல்? துருப்பிடிச்சுப் போன, தேஞ்சுபோன, அவதூறா, அசிங்கமா பேசுற அரசியல் எதுக்கு நமக்கு?
அதுக்கப்புறம் அவங்க இஷ்டம், அவங்க எடுத்துக்கணும்னா எடுத்துக்கட்டும், இல்லைனா விட்டுட்டும்.
நம்ம நண்பர்கள் எது பேசினாலும் ‘நாங்க மிசாவை பார்த்தவங்க, மிசாவை பார்த்தவங்க’… எல்லாத்துக்கும் மிசாவை கொண்டு வந்து விட்டா என்ன செய்யறதுன்னு தெரியல!
ஐயா பெரியவர்களே, எல்லாருக்கும் அந்த மிசாவை பத்தின ஹிஸ்ட்ரியைப் பத்தி எல்லாருக்கும் நல்லாத் தெரியும். நடந்தது, நடக்கிறது, நடக்கப்போறது எல்லாம் மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. மக்களை விடவா நாம இவங்களை வந்து கமெண்ட் பண்ணிட போறோம்?
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் திமுகவைப் பற்றி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒன்னு சொன்னாரு:
‘பேசிப் பழகிய பொய்… வாங்கிப் பழகிய கை… போட்டுப் பழகிய பை! என முதல்வர் விஜய் பேசினார்…





