தமிழகம்

அடிச்சாரு பாரு அப்பாயின்மெண்ட்.. இனி கவுன்சிலர், சேர்மன் எல்லாம் வேலைக்கு ஆள் எடுக்க முடியாது.. உள்ளாட்சி அமைப்புகளில் வேலை காலி என்றால் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் நிரப்பனும்.. லஞ்சம் கிடையாது.. சிபாரிசு கிடையாது.. மெரிட் இருந்தால் வேலை.. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..

அடிச்சாரு பாரு அப்பாயின்மெண்ட்.. இனி கவுன்சிலர், சேர்மன் எல்லாம் வேலைக்கு ஆள் எடுக்க முடியாது.. உள்ளாட்சி அமைப்புகளில் வேலை காலி என்றால் டிஎன்பிஎஸ்சி மூலம் தான் நிரப்பனும்.. லஞ்சம் கிடையாது.. சிபாரிசு கிடையாது.. மெரிட் இருந்தால் வேலை.. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. அரசு வேலை என்றால் இனி கிடைப்பது ஈசி.. கார்ப்பரேட் கம்பெனிக்காரங்க லே ஆஃப் செய்து வரும் இந்த நேரத்தில் இளைஞர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்…

 

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பல தசாப்தங்களாக நிலவி வந்த அரசியல் சிபாரிசுகள், பின்வாசல் நியமனங்கள் மற்றும் லஞ்ச முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வரலாற்றுச் சிறப்புமிக்க மாஸ்டர் ஸ்ட்ரோக் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கூடுதல் பணிகள் சட்டத்தில் இரு அதிரடி சட்டத்திருத்தங்களைச் செய்து, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணி நியமனங்களையும் டிஎன்பிஎஸ்சி வரம்பிற்குள் அரசு கொண்டு வந்துள்ளது. அரசு வேலைக்காக இரவு பகலாகக் கஷ்டப்பட்டுப் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தமிழக வேலைவாய்ப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

முந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருக்கும் கிளார்க், இளநிலை பொறியாளர், சுகாதார ஆய்வாளர் வரி வசூலிப்பாளர் போன்ற பணியிடங்கள் அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களின் மூலமாகவே நிரப்பப்பட்டு வந்தன. இதனால் கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ-க்களின் அரசியல் சிபாரிசு, பணம் கொடுத்து பின்வாசல் வழியாக வேலை வாங்குவது போன்ற மாபெரும் ஊழல்கள் அரங்கேறின. தகுதியும் திறமையும் வாய்ந்த ஏழை எளிய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, ஆளுங்கட்சியினரின் உறவினர்களுக்கும் பண பலம் படைத்தவர்களுக்கும் மட்டுமே வேலைவாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்ட அவலநிலை நீடித்து வந்தது. இந்த அநீதிக்குச் சாட்டையடி கொடுக்கும் வகையில் தவெக அரசு தற்போது இச்சட்டத்தை மாற்றி அமைத்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகள் அனைத்துமே இச்சட்டத்தின் நேரடி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டாவது மாற்றமாக, பிரிவு 2-ல் அமைப்பின் வரையறைக்குள் ‘நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு’ சேர்க்கப்பட்டிருப்பதுடன், 1998-ஆம் ஆண்டின் நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவு 2(45)-ன் கீழ் வரும் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளும் இதற்குப் பொருந்தும் எனத் தெள்ளத்தெளிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள் மற்றும் 561 பேரூராட்சிகளில் காலியாகும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் இனி 100 சதவீதம் வெளிப்படையான முறையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் மூலமாக மட்டுமே நிரப்பப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையிலான நேர்முகத் தேர்வு மட்டுமே பணி நியமனத்தை தீர்மானிக்கும் என்பதால், அரசியல் தலையீடோ அல்லது இடைத்தரகர்களின் லஞ்சக் கைகளோ இனி அங்கே வாலாட்ட முடியாது. தகுதியான இளைஞர்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்குள் வரும்போது, நகர்ப்புற மக்களுக்குக் கிடைக்கும் சேவைகளும் முன்னெப்போதையும் விட மிக நேர்த்தியாகவும் வேகமாகவும் சென்றடையும்.

வேலைவாய்ப்பில் லஞ்சத்திற்கு இடமில்லை; திறமைக்கு மட்டுமே முன்னுரிமை” என்ற சிஎம் விஜய்யின் இந்த அதிரடி அணுகுமுறை, முந்தைய ஆட்சியாளர்களின் ஊழல்களால் நம்பிக்கையிழந்திருந்த போட்டித்தேர்வு மாணவர்களிடையே மாபெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.

எனவே, நகர்ப்புற திட்டமிடல் சட்டத்திருத்தம் முதல் இந்த டிஎன்பிஎஸ்சி கூடுதல் பணிகள் சட்டத்திருத்தம் வரை, தவெக அரசு எடுத்து வரும் ஒவ்வொரு முடிவும் தமிழ்நாட்டின் கட்டமைப்பை நேர்மையான பாதையில் மீட்டெடுக்கும் மாபெரும் புரட்சியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் அரங்கேற்றும் மலிவான திசைதிருப்பல் அரசியலையும் ஊடக வியூகவாதிகளின் பொய்ப் பிரச்சாரங்களையும் தவிடு பொடியாக்கி, தகுதியுள்ள ஏழை எளிய இளைஞர்களின் கரங்களில் அரசுப் பணியை வழங்கும் சிஎம் விஜய்யின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையைத் தமிழ்நாடே வியந்து பாராட்டி வருகிறது!

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.