கூலி படத்துக்கு எனர்ஜியை ஏற்ற!.. அதிரடியாக ரஜினிகாந்த் எங்கே போயிருக்காருன்னு பாருங்க!..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் அப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி வைரான நிலையில் தற்போது ரஜினிகாந்த் அபுதாபிக்கு கிளம்பி சென்றுள்ளார்.

அபுதாபி சென்ற ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் உலகம் முழுவதும் அறியப்படும் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். தன் கடின உழைப்பால் முன்னேறிய அவர் அண்ணாமலை, பாட்சா, முத்து, படையப்பா, சந்திரமுகி, எந்திரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, கபாலி, காலா, எந்திரன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகி சரியாக போகாத நிலையில் ரஜினிகாந்த் கம்பேக் கொடுக்கும் விதமாக நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படம் அமைந்தது.

அதை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அப்படமும் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பினை பெறவில்லை. மேலும், லைகா நிருவனம் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் மூலம் பலரையும் கவர்ந்தவர் இயக்குநர் ஞானவேல் என்பதால் வேட்டையன் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகள் கூடியுள்ளன. இப்படத்தில் ரஜினியுடன் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைராகி வந்தது. மேலும், இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலி படத்துக்கு ரெடியாகிறாரா?:

வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷ் கணகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கூலி படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் டைட்டில் டிஸர் சமீபத்தில் ரீலிஸாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது முன்னணி இயக்குநர் பட்டியலில் இடம்பெற்றிருகிறார். கார்த்திக், கமல்ஹாசன், விஜய் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றிய லோகேஷுக்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பணியாற்ற வாய்ப்பும் கிடைத்துள்ளது.

கூலி படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் தற்போது அபுதாபி சென்றுள்ளார். அடுத்த படத்துக்காக இன்னமும் எனர்ஜி ஏற்றி விட்டு ரஜினிகாந்த் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 73 வயதிலும் தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிகளில் அடிதூள் கிளப்பி வருகிறார் ரஜினிகாந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...