ஆட்டமா ஆடுனா காணாமா போய்டுவீங்க.. இளம் நடிகர்களை எச்சரித்த திருப்பூர் சுப்ரமணியன்

இன்றைய சூழ்நிலையில் படங்கள் தயாரிப்பது என்பது கத்திமேல் நடப்பது போன்ற விஷயமாகும். ஒரு படத்தின் கதையே அந்தப் படத்தின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஹீரோக்களோ, ஹீரோயின்களோ அல்ல. அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு லால்சலாம். என்னதான் சூப்பர் ஸ்டாரே நடித்திருந்தாலும் படம் என்னவோ படுத்துக் கொண்டது. நல்ல கதையம்சமும், விறுவிறு திரைக்கதையும் இருந்தால் புதுமுகங்கள் நடித்த படங்கள் கூட 100 நாட்களைத் தாண்டி ஓடும். அதற்கும் ஓர் உதாரணம் மஞ்சுமேல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படி படங்கள் தயாரிக்கும் போது அதன் தயாரிப்பு செலவைக் காட்டிலும் அதிக செலவு வைப்பது நடிகர், நடிகைகளின் சம்பளம் தான். ஏதோ ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டு அடுத்த படத்திலேயே தங்களது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திக் கேட்கும் போது தயாரிப்பாளர்கள் யோசிக்கின்றனர். இதனால் அடுத்த ஹீரோக்களைத் தேடி ஓடிவிடுகின்றனர். அந்த வகையில் பல இளம் கதாநாயகர்கள் ஒரு சில வெற்றிப்படங்களைக் கொடுத்து விட்டு தங்களது சம்பளத்தை மளமளவென உயர்த்திவிடுகின்றனர்.

கடந்த வரும் குட்நைட், லவ்வர் என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த மணிகண்டன் தற்போது தனது சம்பளத்தை 2 கோடி வரை உயர்த்திவிட்டாராம். அதேபோல் லிப்ட், டாடா என இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்த கவினும் தற்போது 2 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தயாரிப்ளார்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்புச் செலவில் பாதிக்கு மேல் ஹீரோவுக்கே சம்பளமாகக் கொடுக்கப்படும் கலாச்சாரம் தமிழ் சினிமா உலகில் அதிகரித்து வருகிறது.

கங்கை அமரனுக்காக வந்த வாய்ப்பு.. அடம்பிடித்த ஏவிஎம் சரவணன்.. புக் ஆன இளையராஜா..

இதனைக் கண்டு தற்போது சினிமா துறையைச் சேர்ந்த ஒருவர் பொங்கி எழுந்து பொதுவெளியில் பேசியிருக்கிறார். தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான திருப்பூர் சுப்ரமணியன், “இளம் நடிகர்களுக்கு நான் சொல்ற விஷயம் ஒன்றுதான். உங்களை வச்சு படம் எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கு லாபம் வருதான்னு பார்த்து சம்பளம் கேளுங்க. ரெண்டு படம் ஹிட் கொடுத்துட்டு ஆட்டமா ஆடுனா காணாம போய்டுவீங்க..” என அதிரடியாகக் கூறியுள்ளார்.

பல கோடிகளை பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி வட்டி கட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் அந்தப் படம் தோல்வி அடையும் போது தங்களது மொத்த வாழ்க்கையையும் தொலைத்து நிற்கின்றனர். அதிலிருந்து மீடேறி வருவதும் கடினமாக உள்ளது. பெரிய பெரிய தயாரிப்பாளர்களுக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே நடிகர்கள் சம்பளம் பார்த்து வாங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...