ரீ- ரிலீஸ் பற்றி ஓபனாக பேசிய காளி வெங்கட்… என்ன இப்படி சொல்லிட்டாரு…

காளி வெங்கட் தமிழ் சினிமாவில் நடிக்கும் துணை மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். தனது சிறு வயதில் பள்ளியில் படிக்கும் நாட்களில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற லட்சியத்தையும் ஆர்வத்தையும் கொண்டவர்.

இளம் வயதிலே நாடகங்களில் நடித்த காளி வெங்கட் 1997 ஆம் ஆண்டு சினிமாவில் வாய்ப்பு தேடுவதற்காக சென்னைக்கு வந்தார். பிழைப்பிற்காக மளிகை சாமான்கள் விற்கும் வேலையை செய்துக் கொண்டே குறும்படங்களில் நடித்து வந்தார்.

‘கலகலப்பு’, ‘உதயம் NH4’ ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். ‘தெகிடி’, ‘முண்டாசுப்பட்டி’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து ‘மாரி 2’, ‘கட்டா குஸ்தி’, ‘மாப்ள சிங்கம்’, ‘ஈஸ்வரன்’, ‘நித்தம் ஒரு வானம்’ போன்ற திரைப்படங்களில் நடித்து தனது எதார்த்தமான நடிப்பினாலும் வெள்ளந்தியான முகத்தினாலும் ரசிகர்களைப் பெற்றவர்.

2002 ஆம் ஆண்டு ‘கார்கி’ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் விருதைப் வென்றார். எமோஷனலான காட்சிகளில் காளி வெங்கட்டின் நடிப்பு காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து விடும். அப்படி ரியலாக அவரது நடிப்பு இருக்கும்.

இந்நிலையில், தற்போது பல படங்கள் ரீ- ரிலீஸ் ஆகி வருகிறது. அதைப் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார் காளி வெங்கட். அவர் கூறியது என்ன வென்றால், எத்தனையோ இளம் இயக்குனர்கள் கஷ்டப்பட்டு எடுத்த படங்கள் ரிலீஸ் ஆகாம நிறைய இருக்கு. அதை விட்டுட்டு ஏன் பழைய ஏற்கனவே பார்த்த படங்களை ரிலீஸ் பண்றாங்கன்னு தெரியல , அதுக்கு பின்னாடி என்ன அரசியல் இருக்குனு தெரியல. பழைய படங்களை ரீ- ரிலீஸ் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்லை என்று பேசியுள்ளார் நடிகர் காளி வெங்கட்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...