ஒரே நாளில் தலைகீழாக சறுக்கிய நடிகை சதா.. கதறி அழுது இன்ஸ்டாவில் போட்ட வீடியோ..!

நடிகை சதா கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகை ஆக இருந்த நிலையில் அவர் தான் சம்பாதித்த பாதி பணத்தை சொந்த படம் எடுத்து இழந்தார் என்றும் அதன் பிறகு அவர் மும்பையில் ஹோட்டல் ஆரம்பித்து அந்த ஹோட்டலில் திடீரென ஏற்பட்ட ஒரு திருப்பம் காரணமாக மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது.

sadha 1ஜெயம் ரவி தமிழ் திரை உலகில் அறிமுகமான ஜெயம் என்ற திரைப்படத்தில் நான் சதாவும் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி காரணமாக அதன் பின்னர் அவர் அஜித் உடன் திருப்பதி, விக்ரமுடன் அந்நியன், மாதவனுடன் பிரியசகி உள்பட பல வெற்றி படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ஹிந்தி கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்தார்.

sadha2

இந்த நிலையில் திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வந்த சதா திடீரென கடந்த 2018 ஆம் ஆண்டு ’டார்ச் லைட்’ என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தின் செலவுக்காக தன்னுடைய சம்பாத்தியத்தின் பாதியை போட்டார். மீதியை வங்கி கடன் வாங்கி தயாரித்தார். இந்த படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார் என்பதும் கணவனை காப்பாற்ற பாலியல் தொழிலாளியாக மாறிய பின்னர் ஏற்படும் திடுக்கிடும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

sadha hotel

இந்த படம் தோல்வி அடைந்ததை அடுத்து தான் சம்பாதித்த மிகப்பெரிய தொகை மூலம் வங்கி கடனை அடைத்து விட்டார். இதனால் அவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து பொருளாதார ரீதியாக மீண்டு வருவதற்காக மும்பையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கினார். மும்பையின் முக்கியமான இடத்தில் ’எர்த் லிங்க் கஃபே’ என்ற பெயரில் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது.

இந்த ஹோட்டலை யாருடைய பொறுப்பிலும் விடாமல் அவரே பார்த்து பார்த்து ஒவ்வொரு பணியையும் செய்தார். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவர் இந்த ஓட்டலில் தான் இருந்தார் என்பதும் கடுமையாக உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sadha hotel1

அவருடைய கடுமையான உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது, வாடிக்கையாளர்கள் குவிய தொடங்கினர். தினமும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடந்தது. இந்த நிலையில் திடீரென அந்த ஹோட்டல் கட்டிடத்தின் உரிமையாளர் சதாவை கடையை காலி பண்ண சொன்னார்.

அவர் நினைத்தால் வேறு ஒரு இடத்தில் கடையை மாற்றி அந்த பிசினஸை தொடர்ந்து இருக்கலாம். ஆனால் அவர் மிகப்பெரிய மனவருத்தம் அடைந்ததால் இனிமேல் ஹோட்டல் தொழிலே வேண்டாம் என்று அந்த ஓட்டலை மூடிவிட்டார். தற்போது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதே பெயரில் அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.

sadha photo

இதனை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் கதறி அழுது ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். தான் பார்த்து பார்த்து கவனித்த ஓட்டல் தன் கையை விட்டு போய்விட்டது என்றும் அவர் கூறினார்.

அதன் பிறகு தற்போது அவர் வைல்ட் போட்டோகிராபராக மாறி உள்ளார் என்பதும் அவருடைய போட்டோக்கள் மிகப் பெரிய அளவில் வைரலாக வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

ஓட்டல் தொழிலில் கிடைத்த லாபம் காரணமாக தற்போது பொருளாதார ரீதியில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை என்று என்பதால் தற்போது விலங்குகளை புகைப்படம் எடுக்கும் முழு நேர தொழிலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சதா ஒரு விலங்குகள் நல ஆர்வலர் என்பதும், அவரது வீட்டில் பல பூனைகள் வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...