அளவுக்கு அதிகமான வருமானம்.. குவிந்த பணம், நகைகள்.. மர்மமான முறையில் முடிந்த நடிகையின் வாழ்க்கை!

தமிழில் ஒரு சில படங்களும், மலையாளத்தில் ஏராளமான படங்களும் நடித்த நடிகை ராணி பத்மினி தன் வீட்டில் வேலை செய்யும் மூன்று நபர்களால் படுமோசமாக கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 1980களில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராணி பத்மினி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்தவர். இவர் சென்னையை சேர்ந்தவர்.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

இவரது தாயார் சிறு வயதிலேயே கணவரை பிரிந்து விட்டதால் தனது ஒரே மகளை மிகவும் செல்லமாக வளர்த்தார். இவருக்கு சினிமாவில் சேர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் இவரால் அதிகபட்சமாக டப்பிங் கலைஞராக மட்டுமே ஆக முடிந்தது.

எனவே தனது மகளை பத்மினி போன்று பெரிய நாட்டிய பேரொளி ஆக்க வேண்டும் என்றும் மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்று முடிவு செய்து ராணி பத்மினி என்று பெயர் வைத்தார். அது மட்டுமின்றி சிறு வயதிலேயே நடனம், நாட்டியம் ஆகியவற்றையும் கற்றுக்கொடுத்தார்.

rani padmini

இந்த நிலையில் தான் தனது மகளை நாயகியாக்க வேண்டும் என்று அவர் மும்பை சென்றார். அங்கு அவர் பல பட கம்பெனிகளில் ஏறி இறங்கிய போதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து மீண்டும் சென்னை வந்து தமிழ் படத்தில் முயற்சி செய்தார்.

அப்போதுதான் தெலுங்கில் சங்கர்ஷியா என்ற படத்தில் ராணி பத்மினிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பல இயக்குனர்கள் அவரை ஒப்பந்தம் செய்தனர். எனவே முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவர் சுமார் ஐந்து படங்களில் ஒப்பந்தமானார். அவற்றில் ஒரு சில படங்கள் முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரிலீஸானது.

தெலுங்கில் மிகப்பெரிய நாயகியாக வலம் வந்ததை அடுத்து தமிழில் மௌலி இயக்கத்தில் உருவான ’மற்றவை நேரில்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

கவர்ச்சியில் தாராளம் காட்டியதால் அவருக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக தெலுங்கில்  கடந்த 1981 ஆம் ஆண்டிலிருந்து 85 ஆம் ஆண்டு வரை சுமார் 40 படங்கள் நடித்தார். வருடத்திற்கு 10 படங்கள் ரிலீஸாகின.

ரஜினியின் ‘ஜானி’: இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!

rani padmini2

இதனை அடுத்து அவருக்கு  செல்வம் குவிந்தது. ஒரு படத்திற்கு அந்த காலத்திலேயே லட்சக்கணக்கில் அவருக்கு சம்பளமாக தயாரிப்பாளர்கள் கொடுத்தனர். இதனால் ஏராளமாக பணத்தை அவர் வீட்டிலேயே வைத்திருந்ததாகவும் அது மட்டும் இன்றி ஏராளமான நகைகளை வாங்கி குவித்ததாகவும் கூறப்படுவதுண்டு. சென்னை அண்ணா நகரில் ஒரு மிகப்பெரிய பங்களாவை அவர் அந்த காலத்திலேயே 15 லட்ச ரூபாய்க்கு வாங்கினார்.

இந்த நிலையில் வசதி வந்தவுடன் தன்னுடைய வீட்டில் உதவிக்காக அவர் டிரைவர், வாட்ச்மேன், சமையல்காரர் ஆகிய மூவரை வேலைக்கு சேர்த்தார். இந்த நிலையில்தான் அவருடைய டிரைவர் அவரிடம் தகாத முறையில் நடந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அந்த கோபத்தில் தான் அந்த டிரைவர், வாட்ச்மேன் மற்றும் சமையல்காரருடன் சேர்ந்து ராணி பத்மணியிடம் இருக்கும் பணம் நகைகளை கொள்ளை அடிக்க திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.

1986ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி  டிரைவர் ஜெபராஜ், காவலாளி லட்சுமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகிய மூவரும் சேர்ந்து ராணி பத்மினி வீட்டில் பணம் நகைகளை கொள்ளை அடித்தனர். அப்போது ராணி பத்மினியின் தாயார் இந்திராணி அவர்களை பார்த்ததும் கத்தினார். இதனை அடுத்து கொலை செய்யவும் தயாராக வந்திருந்த அந்த மூவர் ராணி பத்மின் தாயாரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ராணி பத்மினி வந்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார். உங்கள் மூவரையும் எங்களுடைய பாதுகாப்பிற்காக தானே வேலைக்கு சேர்த்தோம், நீங்களே இப்படி துரோகம் செய்யலாமா என்று கேட்ட நிலையில் அவரையும் சரமாரியாக குத்தினர். குறிப்பாக ராணி நெஞ்சில் மட்டும் 12 முறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தகவல் வெளியானது.

rani padmini

இதனை அடுத்து பணம் நகைகளை கொள்ளை அடித்துக் கொண்டு மூவரும் தப்பி ஓடினர். இந்த நிலையில் ராணி பத்மினியும் அவருடைய தாயாரும் மிகப்பெரிய பங்களாவில் வசித்ததால் அவர்கள் இறந்து கிடந்தது பல நாட்களாக வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இருந்தது.

ஒரு வாரம் கழித்து ராணி பத்மினியை பார்க்க வந்த சினிமாக்காரர் வருவார் காலிங் பெல் நீண்ட நேரமாக அடித்தும் திறக்கவில்லை என்பதை அடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். காவல் துறையினர் வந்து கதவை உடைத்து பார்த்தபோது தான் அழுகிய நிலையில் இரண்டு பிணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்துதான் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்கு பிறகு இறந்தது ராணி மற்றும் அவருடைய தாயார் என்று தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணையில் அவரிடம் வேலை செய்த மூவர் தான் கொலையாளிகள் என்பதை உறுதி செய்து அவர்களை மிகுந்த சிரமத்திற்கு பிறகு கைது செய்தனர்.

இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்த நிலையில் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் மூவருக்கும் தூக்கு தண்டனை அளித்தது. இதனை அடுத்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

ஆனால் சிறைச்சாலையில் இருக்கும் போது ஜெபராஜ் என்பவர் மரணம் அடைந்தார். கணேசன் என்பவர் சிறையில் இருந்து தப்பி ஓடிவிட்டார், அவர் கடைசி வரை பிடிபடவில்லை. லட்சுமி நரசிம்மன் 18 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். 18 ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயதில் சினிமாவில் அறிமுகம்.. 56 வயதில் மாரடைப்பால் மரணம்.. நல்லெண்ணெய் சித்ராவின் சினிமா வாழ்க்கை..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று திரை உலகில் மிகப்பெரிய நடிகையாக கவர்ச்சி கன்னியாக வலம் வந்த ராணி பத்மினியின் வாழ்க்கை ஒரு சில படங்களிலேயே முடிந்து விட்டது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.