தளபதி விஜய்யை நேருக்கு நேர் பார்த்து தமன்னா கேட்க நினைக்கும் கேள்வி என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான தமன்னா தற்பொழுது இளைஞர்களின் கன்னியாக வலம் வருகிறார். மேலும் தமிழில் நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன்,விஜய்யுடன் சுறா, கார்த்தியுடன் பையா ஆகிய படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து உச்ச நட்ஷத்திரமாக ஜொலிக்கிறார் தமன்னா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லெஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்னும் ஆந்தாலஜி படத்தில் நடித்து சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக மாறினார்.

அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் தமன்னா. இந்த பாடல் சோசியல் மீடியாவில் 250 கோடி பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தமன்னா, விஜய்யுடன் நடித்த சுறா படத்தின் மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு அடுத்ததாக நீங்கள் விஜய் அவர்களை பார்த்தால் என்ன கேள்வி கேட்ப்பீர்கள் என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு அவர் கொஞ்சம் கூட தயங்காமல் தளபதி 68 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என கேட்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் தற்பொழுது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட நாட்களுக்கு பிறகு திரிஷா நடித்துள்ளார். அதை தொடர்ந்து வெங்கட் பிரபு படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதாநாயகி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

விஜய்யின் 50 வது படம் குறித்து மோசமான அனுபவத்தை பகிர்ந்த தமன்னா! இது தான் காரணமா..

மேலும் விஜய் 68 படத்தின் ஹீரோயின் லிஸ்ட்டில் ஆல்ரெடி ஜோதிகா, பிரியா பவானி சங்கர் என பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும் நிலையில் காவாலா பாடல் மூலம் டிரெண்டிங்கின் உச்சத்தில் இருக்கும் தமன்னாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews