விஜய்யின் 50வது படம் குறித்து மோசமான அனுபவத்தை பகிர்ந்த தமன்னா! இது தான் காரணமா..

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் வெளியானதில் இருந்து தமன்னா சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார். தற்பொழுது ஜெயிலர் படத்தின் புரொமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில், நீங்கள் நடித்ததில் மிக மோசமான அனுபவம் கொண்ட படம் எது என்று கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு தமன்னா கொஞ்சம் கூட தயங்காமல் தளபதி விஜய்யின் ‘சுறா’ படம் என கூறியுள்ளார்.

விஜய்யின் நடிப்பில் 50வது படமாகவும் வெளியான படம் தான் சுறா. எஸ்பி ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் ஒரு அதிரடி நகைச்சுவைப் படமாகும். இப்படத்தில் தளபதி விஜய், தமன்னா, வடிவேலு, தேவ் கில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது வசூலிலும் சாதனை படைக்க தவறியது.

தமன்னா சுறா படம் குறித்து கூறும்போது எனக்கு படம் என்றாலே மிகவும் பிடிக்கும், அதில் மிகவும் மோசமாக நடித்ததாக நான் நினைத்த படங்களில் ‘சுறா’ படமும் ஒன்று என தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எனக்குத் தெரியும் இந்த படம் வெற்றி பெறாது என எனக்குள் ஒரு வலுவான உணர்வு இருந்தது என கூறியுள்ளார்.

ஓப்பனிங் பாடலில் விஜய்யுடன் கைகோர்க்கும் பிரபுதேவா! தெறிக்க விடும் வேற லெவல் அப்டேட்!

விஜய்யின் கேரியரில் ‘சுறா’ படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து வெங்கட் பிரபு படத்திலும் இணைந்து நடிக்க உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...