ஓப்பனிங் பாடலில் விஜய்யுடன் கைகோர்க்கும் பிரபுதேவா! தெறிக்க விடும் வேற லெவல் அப்டேட்!

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்து முன்னணி இயக்குனரான லோகேஷ் தற்பொழுது நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகள் தற்பொழுது நடந்து வருகிறது.

விஜய்யின் லியோ படம் கண்டிப்பாக சர்வதேச அளவில் சாதனை செய்யும் என்பதை ரசிகர்களின் மற்றும் தயாரிப்பு தரப்பில் இருந்து எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் வெளியிட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் கதை தயாரிப்பதற்காக வெங்கட் பிரபு சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்ததாகவும், அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கதை இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சமீபகாலங்களில் விஜய் மற்றும் அனிருத் கூட்டணியில் அடுத்தடுத்து படங்கள் சிறப்பாக அமைந்து வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு தன்னுடைய படங்களை யுவன் சங்கர் ராஜாவை தான் இசையமைப்பாளராக களமிறக்குவது வழக்கம். இந்த நிலையில் தளபதி 68 படத்தில் விஜய், வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா கூட்டணி தான் அமைய அதிகமாக வாய்ப்பு உள்ளது.

இந்த கூட்டணி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நேரத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனம் பல கோடிகளுக்கு கைப்பற்றியுள்ளது.

லியோ படத்தின் 2-வது சிங்கிள் எப்போது தெரியுமா? இன்னும் அவளோ நாள்கள் வெயிட் பண்ணனுமா?

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு தற்பொழுது கிடைத்துள்ளது. விஜய் 68 படத்திற்காக இசையமைக்கும் பணியை யுவன் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடலில் நடிகர் விஜய்யுடன் பிரபுதேவா ஆட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது ரசிகர்கள் மனதில் எகிற துவங்கியுள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...