Tag: vijay

vijay mani

அரசியல்ங்கிறது அத்திப்பூத்தா மாதிரி வர்றது இல்ல… மக்களோட கஷ்டத்துல தினசரி நிக்குறது! விஜய் மௌனமா இருந்தாருன்னா, அது ‘ஸ்ட்ரேட்டஜி’ இல்ல… மக்களுக்கு பதில் சொல்ல பயம்ன்னு அர்த்தம்.. சினிமால கூட விசில் அடிச்சிகிட்டே இருந்தா தான் சத்தம் வரும்… ஆனா அரசியல்ல விசில் கிடைச்சதுக்கு அப்புறமும் ஏன் இன்னும் மௌனம்? கருத்து சொல்ல தெரியாதவங்களுக்கு ஆட்சி எதுக்கு? போராட்டத்தை வெறுக்குறவங்களுக்கு அதிகாரம் எதுக்கு?

ஜனவரி 25, 2026, 07:50
vijay2

ஒவ்வொன்னுக்கும் கருத்து சொல்லி மக்களை குழப்ப கூடாது.. போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தரக்கூடாது.. எல்லா பிரச்சனைக்கும் அறிக்கை வெளியிட்டு நாடகமாட கூடாது.. பிரதமருக்கும் மத்திய அமைச்சருக்கும் கடிதம் எழுதி காலத்தை வேஸ்ட் செய்ய கூடாது.. பவர் கைக்கு வந்தா எல்லா பிரச்சனைக்கும் தீர்வு காண்போம்.. மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வோம்.. இதுதான் விஜய்யின் இயற்கையான அரசியல்.. வேணுமா? வேண்டாமான்னு மக்கள் தான் முடிவு செய்யனும்..!

ஜனவரி 25, 2026, 07:39
politics 1

விஜய்யை நம்பாத ஓபிஎஸ், டிடிவி, பிரேமல்தா, ராமதாஸ், அன்புமணி.. ராகுலும் சோனியாவும் இன்னும் முழுசா விஜய்யை நம்பல.. தப்பித்தவறி காங்கிரஸ் வந்தாலும் விசிக நம்பாது போல் தெரியுது.. ஆனால் மக்கள் நம்புறாங்களே.. இளைஞர்களும் பெண்களும் நம்புறாங்களே.. மாற்றம் வேனும்ன்னு நினைக்கிற நடுநிலை வாக்காளர்கள் நம்புறாங்களே.. நீங்க நம்பலன்னா என்ன… நாங்க உங்களை நம்ப வைக்கிறதுக்காக வரல, உங்களை மாத்துறதுக்காக வந்திருக்கோம்..

ஜனவரி 24, 2026, 16:45
whistle

ரயில் கிளம்பணும்ன்னா விசில் ஊதனும்.. திருடனை பிடிக்கனும்ன்னா விசில் ஊதனும்.. மேட்ச் ஸ்டார்ட் ஆகனும்ன்னா விசில் ஊதனும்.. மேட்சில யாராவது தப்பு செஞ்சாலும் விசில் ஊதனும்.. ராத்திரி நேரத்துல் மக்களை பாதுகாக்கனும்ன்னா விசில் ஊதனும்.. இயற்கை பேரிடரின்போது உதவி கேட்கனும்ன்னா விசில் ஊதனும்.. விசில் ஊதுனாத்தான் எல்லாமே நடக்கும்.. தமிழ்நாட்டு தேர்தலிலும் விசில்ன்னால ஒரு புரட்சி நடக்கும்..! தவெக தொண்டர்களின் மாஸ் பதிவுகள்..!

ஜனவரி 24, 2026, 16:26
vijay eps mks

திமுக தேர்தல் அறிக்கையில் இலவசம்.. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் டபுள் இலவசம்.. ஆனால் இலவசம் இல்லாத அதே நேரத்தில் புரட்சிகரமான தவெகவின் தேர்தல் அறிக்கை.. இந்திரா காந்தி காலத்தில் வங்கிகள் அரசுடமை ஆக்கப்பட்டது போல் தவெக ஆட்சியில் தனியார் பள்ளிகளும், மருத்துவமனைகளும் அரசுடமை ஆக்கப்படுமா? டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? கல்வியும் மருத்துவமமும் இலவசம் ஆகுமா?

ஜனவரி 24, 2026, 16:13
amitshah modi vijay

2 கூட்டணியிலும் எத்தனை கட்சி வேணும்னாலும் போகட்டும்.. ஆனால் ஓட்டு போட்றது கட்சிக்காரங்க மட்டுமில்லை.. பொதுமக்களும் தான்.. கட்சிக்காரங்க ஓட்டை விட பொதுமக்களோட ஓட்டுக்கு தான் பவர் ஜாஸ்தி.. விஜய் பக்கம் பொதுமக்கள் திரும்பி விசில் அடிக்க ஆரம்பிச்சா.. ரெண்டு கூட்டணிக்கும் பணால் தான்.. மக்கள் சக்தின்னா என்னன்னு இன்னும் பல அரசியல்வாதிக்கு புரியல.. அது புரியும்போது அவங்க அரசியல்லயே இருக்க மாட்டாங்க..!

ஜனவரி 24, 2026, 11:30
vijay

விஜய் கூட எந்த கட்சியும் போகாதது கூட மக்களுக்கு அனுதாப அலையாக மாறலாம்.. ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வந்த ஒருவருக்கு எந்த கட்சியுமே கைகொடுக்கவில்லை என்ற ஆதங்கம் மக்களுக்கு இருக்கும்.. யார் கை கொடுக்காவிட்டால் என்ன நாம் கைகொடுப்போம் என மக்கள் முடிவு செய்தால் இரு திராவிட அணிகளும் ஸ்வீப் தான்.. எல்லோரும் அரசியலை பிசினஸாக பார்க்கிறார்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வந்தால் எல்லா கட்சிக்கும் ஆபத்து தான்..!

ஜனவரி 24, 2026, 08:45
vijay amitshah

விஜய்க்கு ரெண்டே ஆப்சன் தான்.. ஒன்னு எங்க கூட சேர்ந்துரு.. இல்லைன்னா காங்கிரஸை திமுக கூட்டணியில் இருந்து பிரிச்சு கூட்டணி வச்சுக்கோ.. ஆர்டர் போட்டாரா அமித்ஷா? விஜய் ஓகே சொன்னதால் தான் விசில் கிடைத்ததா? என்னங்கடா கலர் கலரா ரீல் விட்ரீங்க.. விஜய் யாரோட கட்டளைக்கும் அடிபணிய மாட்டார்.. இங்க என்ன தோணுதோ அத பேசுவேன், இங்க என்ன தோணுதோ அத செய்வேன்.. அதுதான் விஜய்..!

ஜனவரி 23, 2026, 21:04
vijay rahul

சாரி விஜய்.. உங்களோட கூட்டணிக்கு வரமுடியாது.. விஜய்யிடம் ஓப்பனாக சொல்லிவிட்டாரா ராகுல் காந்தி? நோ பிராப்ளம் நாங்க தனியா பாத்துகிறோம்.. பதிலை சொன்னாரா விஜய்? சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் செய்தி.. எந்த அளவுக்கு உண்மை?

ஜனவரி 23, 2026, 18:00
vijay 3

10,000 ரூபாய் கொடுத்தா போதும் 10 லட்சம் ரூபாய்க்கு வேலை செய்றாங்க.. விஜய்யை திட்டுவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் போலி அரசியல் விமர்சகர்கள்.. நீங்க சொன்னது ஒன்னு கூட நடக்கலையே.. விஜய்க்கு பொது சின்னம் கிடையாதுன்னு எல்லோரும் கூவுனாங்க.. இப்ப சின்னம் கிடைச்சிருச்சு.. ஜனநாயகன் படமும் விரைவில் ரிலீஸ் ஆகும்.. தனித்து போட்டியிட்டு ஆட்சியையும் பிடிப்பார்.. அப்ப தான் போலிகளின் முகத்திரை கிழியும்..!

ஜனவரி 23, 2026, 17:32
parasakthi 2

பராசக்தி படக்குழுவிற்கு பதிலாக ஜனநாயகன் படக்குழு மோடியை சந்தித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாமியார் உடைச்சா அது மண் குடம்… மருமகள் உடைச்சா அது பொன் குடமா? நீங்க பண்ணா அது ‘பண்பாடு’, அவங்க பண்ணா அது ‘சரணாகதியா’? ஊடகங்களின் டபுள் கேம் இனிமே செல்லாது! அதிகாரத்துக்கு ஜால்ரா தட்டுறது ஊடக தர்மம் இல்ல… அது வெறும் ‘ஜின்சாக்’ அரசியல்! உங்க ஆளுங்க மோடியைப் பார்த்தா அது ‘பண்பாட்டுப் பொங்கல்’… எங்க ஆளுங்க பார்த்தா அது ‘பயத்துல வந்த பொங்கல்’! இது என்ன நியாயம்?

ஜனவரி 23, 2026, 12:12
vijay1

இவ்வளவு அமைதியா இருந்தும் கருத்துக்கணிப்பில் விஜய்க்கு முன்னேற்றம்.. சமீபத்திய சர்வேயில் தவெகவுக்கு 35% களத்தில் இறங்கினால் இன்னும் அதிகரிக்கும்.. சிபிஐ, ஜனநாயகன் பிரச்சனை எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டு.. எழுந்து வாங்க விஜய்.. கடைசி வரை போராடுவோம்.. தமிழக மக்களை காப்பாற்ற நம்மை விட்டால் யாரும் இல்லை.. தொண்டர்களின் உணர்ச்சி பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைரல்..

ஜனவரி 23, 2026, 08:59