திமுக-வுல ஒரு ஏழையாவது இருக்காங்களா? அதிமுக-வுல ஒரு சாமான்யனாவது இருக்காங்களா? தலைவர்கள் எல்லாம் கோடீஸ்வரங்களா இருக்கிற நாட்டுல, மக்கள் மட்டும் ஏன் இன்னும் ஏழையா இருக்காங்க? வாரிசுகளுக்குச் சொத்தும் பதவியும் சேர்த்து வைக்கிறதுக்கு பேரு சாதனை இல்லை… மக்களோட வயித்துல பால் ஊத்துறதுதான் உண்மையான ஆட்சி! திராவிட கோட்டையில ஓட்டை விழப்போற நேரம் இது… விஜய்யோட வருகை தமிழக அரசியலோட தலையெழுத்தையே மாத்தப்போற சரித்திரம்!மார்ச் 26, 2026, 16:48
விஜய் அமைதியாக இருக்கிறார் என்று யார் சொன்னது? பத்திரிகையாளர்களை சந்திக்காததால் அவர் மந்தமாக இருப்பது போல் தெரிகிறது.. ஒட்டுமொத்த ஊடகமும் விஜய்க்கு எதிராக இருப்பதால் தவெக போட்டியிலேயே இல்லை என்பது போல் ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.. விஜய் 29ஆம் தேதி வெளியே வருவார்.. மீண்டும் மக்கள் வெள்ளத்தை மீடியா பார்க்கும்.. அவர் பின்னாடியே போகும்.. தவெக தொண்டர்கள் நம்பிக்கை..!மார்ச் 26, 2026, 16:24
மார்ச் 29 முதல் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்.. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை.. ஒரு நிமிஷம் கூட ஓய்வில்லை.. ஒவ்வொரு வேட்பாளரும் விஜய்யுடன் இருக்கும் வகையில் ஏஐ வீடியோ.. ஒவ்வொரு நாளும் மக்களுக்கான ஒவ்வொரு அறிவிப்பு.. இதுவரை மக்கள் பார்த்திராத தேர்தல் பிரச்சாரம்.. 20 நாளும் குலுங்க போகுது தமிழகம்..!மார்ச் 26, 2026, 11:14
தேர்தலில் கூட்டணி கணக்கோ, சின்னமோ, பாரம்பரியமோ, பணமோ செல்லாது.. ஓட்டு போடும் மக்களின் மனநிலை தான் முக்கியம்.. இந்த கட்சி வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டால் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஓட்டு போட மாட்டார்கள்.. இவரை முதல்வராக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் ஒட்டுமொத்த மீடியாவும் எதிர்த்து செய்தி வெளியிட்டாலும் மக்கள் ஓட்டு போடுவார்கள்.. மக்கள் தான் ஆட்டநாயகன் என ஒரு அரசியல் கட்சியும் புரிந்து கொள்ளவில்லை.. மக்களின் மனதில் இருப்பது விஜய்யா? ஸ்டாலினா? எடப்பாடியாரா?மார்ச் 26, 2026, 08:03
ஊடகங்கள் தான் விஜய்யை நெகட்டிவ்வாக சித்தரிக்கிறது.. தமிழ்நாட்டில் 2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன.. ஒரு கார்டுக்கு ஒரு ஓட்டு விஜய்க்கு கிடைத்தால் கூட 2 கோடி ஓட்டு கிடைக்கும்.. விஜய் ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.. குடும்பத்தில் ஒருவராக மாறிவிட்டார்.. அந்த தைரியத்தில் தான் அவர் அமைதியாக இருக்கிறார்.. மக்கள் மாற்றத்தை விரும்புவது 100% உண்மை.. அந்த மனநிலை நிச்சயம் விஜய்க்கு வெற்றி தரும்.. தவெக தொண்டர்கள்..!மார்ச் 26, 2026, 07:52
எங்க வேட்பாளர்கள் பூக்கடை வச்சிருக்கலாம், வாடகை வீட்ல இருக்கலாம்… ஆனா அவங்ககிட்ட இருக்குற நேர்மையும், தலைவன் மேல இருக்குற நம்பிக்கையும் முன்னாடி, உங்க கோடி ரூபா பணபலமெல்லாம் வெறும் தூசு.. மத்தவங்களுக்கெல்லாம் இது தேர்தல்… ஆனா தமிழக மக்களுக்கு இது வாழ்வாதார போராட்டம்! இந்த தடவை விஜய்யை மிஸ் பண்ணிங்கன்னா, ஆயுசுக்கும் திராவிட அடிமையாத்தான் இருக்கனும்..!மார்ச் 25, 2026, 18:15
கோட்டை யாருடையதுங்கிறது முக்கியமில்ல… அங்க இனி யாரோட கொடி பறக்கப்போகுதுங்கிறதுதான் முக்கியம்! பெரம்பூர்ல திமுகவோட வாக்கு வங்கியில விஜய் போடுற ஓட்டை, மொத்த தமிழகத்தோட தலையெழுத்தையே மாத்தும்.. விமர்சனம் பண்றவங்க பண்ணிக்கிட்டே இருக்கட்டும்… நான் சைலண்ட்டா செய்யுற வேலைக்கு, தேர்தல் முடிவு வயலண்ட்டா பதில் சொல்லும்! நெருக்கமானவர்களிடம் நம்பிக்கையுடன் சொன்ன விஜய்?மார்ச் 25, 2026, 18:03
ஒரு நடிகனை நம்பி இளைஞர்கள் செல்ல கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம் விஜய்.. விஜயகாந்த் ஏமாற்றினார்.. கமல்ஹாசன் ஏமாற்றினார். சரத்குமார் ஏமாற்றினார்.. சீமான் ஏமாற்றி கொண்டே இருக்கிறார்… கடைசியில் விஜய்யும் ஏமாற்றிவிட்டார்.. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்வது எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது.. இனிமேலாவது சுதாரியுங்கள் Gen z தலைமுறைகளே..மார்ச் 25, 2026, 16:45
கூட்டணி தொகுதி உடன்பாட்டை திமுக கிட்டத்தட்ட முடித்துவிட்டது.. அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதியையே அறிவித்துவிட்டது.. சீமான் பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார்.. விஜய் என்ன செய்கிறார்? கடைசி வாரத்தில் இசை வெளியீட்டு விழா நடத்துவது போல் ஒருவாரத்திற்கு முன்னர் தான் வெளியே வருவாரா? பனையூரிலேயே முடங்கியிருந்தால் மாற்றம் எப்படி வரும்? நெட்டிசன்கள் விளாசல்..!மார்ச் 25, 2026, 16:32
இன்னும் கூட விஜய்யை மக்கள் நம்ப தயாரா இருக்காங்க.. திமுக மேல் இருக்குற வெறுப்பு அவ்வளவு.. இந்த பக்கம் பாஜக மேல இருக்குற பயம் அவ்வளவு.. விஜய் வந்தா ஒரு மாற்றம் வரும்ன்னு நம்புற கூட்டம் இன்னும் இருக்குது.. இப்ப சுதாரிச்சா கூட விஜய் கிங் மேக்கரா மாற முடியும்.. இன்னும் 25 நாள் டைம் இருக்குது.. வெளியே வந்து கலக்குங்க தலைவா.. அழைப்பு விடுக்கும் தவெக தொண்டர்கள்..!மார்ச் 25, 2026, 12:59
தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் காவல்துறை.. இனி திமுக அரசால் எந்த பிரச்சனையும் தர முடியாது.. சிங்கம் களமிறங்க போவுது.. சிங்கம் காட்டுல பசியோடு வேட்டையாடி யாரும் பார்த்திருக்க மாட்டாங்க.. நம்ம சிங்கமும் ஓட்டு வேட்டையாடுறத இனிமேல் தான் பார்க்க போறீங்க.. ஒரு அமைச்சரும் இந்த தேர்தல்ல ஜெயிச்சிகிட மாட்டீங்க.. தரமான சம்பவம் செய்ய போறார் தளபதி..மார்ச் 25, 2026, 12:40
இனி எந்த தடங்கலும் இல்லை.. எந்த கட்டுப்பாடும் இல்லை.. இனி விஜய்யின் ஆட்டமே வேற லெவலில் இருக்கும்.. கொள்கை எதிரியும், அரசியல் எதிரியும் அலற போறாங்க.. விஜய் இதுவரைக்கும் அமைதியா இருந்தாருன்னு நினைச்சிங்களா? 234 வேட்பாளர்களையும் முடிவு செஞ்சாச்சு.. தேர்தல் சுற்றுப்பயண திட்டமும் முடிவாகிருச்சு.. சரியான நேரத்துல எடுக்குற முடிவுதான் வெற்றியை தரும்… இப்போ அந்த நேரம் வந்திருச்சு, இனி தமிழ்நாட்டோட ஒவ்வொரு வீதியிலும் தவெகவின் வெற்றி முழக்கம் தான் கேட்கும்!மார்ச் 25, 2026, 12:25