எதுக்கு விஜய் பிரச்சாரத்திற்கு போறீங்க.. தலைமை செயலகம் போய் தலைமை தேர்தல் ஆணையரை பார்த்தாலும் வேலைக்கு ஆகாது.. டெய்லி 10 வீடியோ போடுங்க.. ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு தொகுதி என ஒதுக்குங்க.. 25 நாள்ல்ல 234 தொகுதியையும் கவர் பண்ணிடலாம்.. ஜெயிச்சு முதலமைச்சரும் ஆயிடலாம்.. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. செயல்ல இறங்குங்க அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 28, 2026, 15:46
வாரம் ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தாச்சு.. விஜய்க்கு எத்தனை சதவீதம் வாக்கு என்பதை தெரிந்து கொள்ளவே முடியல.. ஒவ்வொரு கருத்துக்கணிப்பிலும் ஒவ்வொரு மாதிரி வருது.. என்னதான்யா இருக்கு உன்கிட்ட அப்படி? உன் பேரை சொன்னாலே மக்கள் உசுரகூட கொடுக்க தயாரா இருக்காங்க.. மக்கள் என்ன செய்ய காத்திருக்காங்களோ.. புலம்பும் உடன்பிறப்புகள், ரத்தத்தின் ரத்தங்கள்..!மார்ச் 28, 2026, 12:40
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையில் வித்தியாசம் வெறும் 5 சதவீதம் தான்.. விஜய் தான் ஆட்டநாயகன்.. திருப்புமுனையை ஏற்படுத்துபவர்.. விஜய் யார் ஓட்டை அதிகம் பிரிக்கிறாரோ அந்த கூட்டணிக்கு நிச்சயம் தோல்வி.. விஜய் ஜெயிப்பாரோ இல்லையோ, இந்த தேர்தலில் ஒரு திராவிட கட்சியை ஒழிச்சு கட்டிடுவார்.. 2031ல் விஜய்க்கும் ஒரு திராவிட கட்சிக்கும் தான் போட்டியே.. அரசியல் விமர்சகர்கள்..!மார்ச் 28, 2026, 12:25
விஜய் வரப்போறாருன்னு தெரிஞ்ச உடனே திடீர் பள்ளம் ஏற்படுது.. பள்ளம் தோண்டி பார்த்தா பயம் வந்துரும்னு நினைச்சீங்களா? அந்த பள்ளத்துலதான் உங்களுக்கான அரசியல் சமாதி இருக்குன்னு இன்னும் உங்களுக்கு தெரியல! புலி ரெண்டு அடி பின்னாடி போகுதுன்னா பயந்துடுச்சுன்னு அர்த்தம் இல்ல… உங்கள மொத்தமா முடிக்க ஒரு பெரிய பாய்ச்சலுக்கு தயாராகுதுன்னு அர்த்தம்! பெரம்பூர்ல பிரச்சாரத்துக்கு தடை போடலாம்… ஆனா மக்கள் ஏப்ரல் 3ஆம் தேதி உங்களை பிரம்பை எடுத்து விரட்ட போறாங்க..!மார்ச் 28, 2026, 08:25
விஜய்யின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு.. வெளியே வா.. வெளியே வான்னு சொல்றீங்களே.. வெளியே வரனும்ன்னு முடிவு பண்ணினா வரவிடமாட்டேங்கிறீங்களே.. அவ்வளவு பயமா? ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு எதாவது தடை இதுவரை உண்டா? விஜய்க்கு மட்டும் ஏன் ஸ்பெஷல் தடை.. ஏன்னா விஜய்க்கு வர்றது காசு கொடுத்து வர்ற கூட்டம் இல்லை.. தானா சேர்ந்த அன்பு சாம்ராஜ்யம்.. தவெகவினர் பதிவுகள் வைரல்..!மார்ச் 28, 2026, 08:15
அப்துல் கலாம் ஐயா கூட இருந்தா மட்டும் பத்தாது… அவர் சொல்லி கொடுத்த கண்ணியம் இருக்கணும்! கண்ணியம் இல்லாதவனுக்கு கம்பி எண்ணுறதுதான் சரியான தண்டனை! பொன்ராஜ் மீது புகார் கொடுத்த விஜய்.. என் தங்கைக்கும் தாய்க்கும் ஒரு பிரச்சனைன்னா, அவங்க வீட்டுப் பிள்ளையா வந்து நிப்பேன்! அவங்களுக்காக குரல் கொடுப்பேன்.. விஜய் ஆவேசம்..!மார்ச் 27, 2026, 18:59
பாஜக சிபிஐயை வச்சு மிரட்டுது, ‘ஜனநாயகனை’ முடக்கி வச்சிருச்சு.. காங்கிரஸ் நம்ப வச்சு கழுத்தறுடுச்சு.. திமுக தன்னோட அதிகாரத்தை பயன்படுத்தி முழு இடைஞ்சல்களை கொடுக்குது.. அதிமுகவும் சைடு கேப்புல அடிக்குது.. ஊடகங்கள் 90% விஜய்யை அடிக்கிறதையே புல்டைம் வேலையா பார்க்குது.. அரசியல் விமர்சகர்களை சொல்லவே வேண்டாம்.. கொடுத்த காசுக்கு மேல கூவுறாங்க.. இத்தனையும் சமாளிச்சுகிட்டு ஒருத்தன் நிக்கிறான்னா, அவன் எவ்வளவு பெரிய கெத்து? இப்படிப்பட்ட ஒருத்தரை மக்கள் மிஸ் பண்ணலாமா?மார்ச் 27, 2026, 18:30
பெரம்பூரில் இப்போதே குவிந்த தவெக தொண்டர்கள்.. நேரலைக்கு தயாராகும் அகில இந்திய ஊடகங்கள்.. என்னங்கடா இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க.. 6 சீட் தான் ஜெயிக்கும்ன்னு சொன்ன தேசிய ஊடகம் முந்தின நாளே பெரம்பூருக்கு வந்த மர்மம் என்ன? விஜய் ஒரு சீட் கூட ஜெயிக்க மாட்டார்ன்னு சொன்ன யூடியூபர்கள் எல்லாம் கேமிராவை தூக்கிகிட்டு பெரம்பூர் வந்துட்டாங்க.. விஜய்ன்ன பவர்.. பவர்ன்னா விஜய்..!மார்ச் 27, 2026, 13:33
நாளை விஜய்யின் பெரம்பூர் கூட்டம்.. இன்றே பெரம்பூரில் ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்.. கூட்டத்தை கட்டுப்படுத்துவது எப்படி என காவல்துறையுடன் ஆலோசனை.. எந்த அரசியல்வாதிக்காவது இப்படி நடந்ததுண்டா? இன்னும் 25 நாள் என்ன செய்ய போறீங்க.. கூட்டம்ன்னா என்னன்னு இனிமேல் தான் எல்லோருக்கும் தெரியும்.. விஜய்டா…மார்ச் 27, 2026, 12:56
நாளை முதல் விஜய் பிரச்சாரம்.. விஜய்க்கு வரும் கூட்டத்தையும் ஸ்டாலினுக்கு வரும் கூட்டத்தையும் பார்த்தாலே தெரிந்துவிடும் ரிசல்ட்.. ஒரு நாளைக்கு 5 தொகுதிக்கு சென்றால் கூட 25 நாளில் 125 தொகுதிக்கு தான் விஜய் செல்ல முடியும்.. திமுகவுக்கு உதயநிதி, கனிமொழி, டிஆர் பாலு, வைகோ, திருமாவளவன், கமல்ஹாசன், பிரேமலதா இருக்காங்க பிரச்சாரத்திற்கு.. விஜய்யிடம் யாரு இருக்கா? ஆனாலும் விஜய் ஜெயிப்பாரு?மார்ச் 27, 2026, 12:12
பிரச்சாரம்ன்னா என்னன்னு நாளையில் இருந்து பார்ப்பீங்க.. காசு கொடுக்காம எப்படி இவ்வளவு கூட்டம் கூடுதுன்னு ஆன்னு வாயை பொளந்துகிட்டு பார்ப்பீங்க.. விஜய் வெளியே வரமாட்டேங்கிறார்ன்னு சொல்றீங்களே, அவர் வெளியே வந்தா நீங்க யாராது தாங்குவிங்களா? அன்பால தானா சேர்கிற கூட்டம்.. இந்த அன்பு விஜய்யை சிம்மாசனத்துல உட்கார வைக்க போறது உறுதி..மார்ச் 27, 2026, 10:22
விஜய் மெதுவா செயல்படுகிறாரோ, வேகமா செயல்படுகிறாரோ, அதெல்லாம் எங்களுக்கு தெரியாது.. இந்த முறை எங்க ஓட்டு விசிலுக்கு தான்.. 50 வருஷமா ஏமாந்தது போதும்.. ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்.. விஜய் சரியா இருந்தாருன்னா, தொடர்ந்து ஆதரிப்போம்.. இல்லைன்னா அவரையும் தூக்கி போட தயங்க மாட்டோம்.. தெளிவாக யோசிக்கும் Zen z தலைமுறையினர்..மார்ச் 27, 2026, 08:07