Tag: dmk

vijay eps stalin

அதிமுக பிரிப்பது வெறும் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்களை… ஆனா விஜய் குறி வைப்பது அதிமுக, திமுகவோட ‘கோர்’ பலத்தை! விஜய் ஒரு தனி ஆளா வந்து திராவிட கட்சிகளின் வாக்கு சதவீதத்தில் ஓட்டையே போடுறாரு.. இது வெறும் தேர்தல் இல்ல, 50 வருஷ திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆரம்பம்.. தமிழக அரசியலோட ‘கிளைமாக்ஸ்’ ஆரம்பமாகிடுச்சு!”

ஜனவரி 16, 2026, 07:53
Chief Minister MK Stalin has allocated Rs.500 crore for the rehabilitation of 5,000 water bodies in Tamil Nadu

ஆட்சியில் அதிருப்தி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையா இல்லைங்கிறது தான் திமுகவுக்கு மிகப்பெரிய பிளஸ் ! ஆனா மக்கள் ஒற்றுமையா முடிவெடுத்தா, கோட்டை கனவெல்லாம் கானல் நீராப் போயிடும்! 2026-ல மக்கள் என்ன தீர்ப்பு அளிக்க போறாங்களோ?

ஜனவரி 15, 2026, 11:34
vijay dmk admk

தமிழ்நாட்டில் இரட்டை இலை மலரும் அல்லது உதயசூரியன் உதிக்கும்.. 3வது கட்சிக்கு வாய்ப்பே இல்லை.. 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பு.. கருத்துக்கணிப்பை தவிடுபொடியாக்குமா விஜய்யின் இளைஞர் கூட்டம்.. உங்க கருத்துக்கணிப்பு ஈபிஎஸ்க்கோ அல்லது ஸ்டாலினுக்கோ சாதகமா இருக்கலாம்… ஆனா அந்த பெட்டிக்குள்ள விழப்போற ஒவ்வொரு இளைஞனோட ஓட்டும் விஜய்க்கான தீர்ப்பா இருக்கும்…!

ஜனவரி 14, 2026, 22:03
stalin vs others

தமிழ்நாட்டு அரசியல் உப்புமா கதை ஆகிறது.. உப்புமா வேண்டாம் தான்.. ஆனால் அதற்கு பதில் எது வேண்டும் என்பதில் ஒற்றுமை இல்லை.. எனவே மீண்டும் உப்புமா தான் வருகிறது.. அதுபோல் திமுக ஆட்சி வேண்டாம் தான்.. ஆனால் திமுகவுக்கு பதில் யார் என்பதில் பிளவுகள் இருப்பதால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவே வாய்ப்பு.. அதிமுக, தவெக, சீமான், அமமுக எல்லோரும் திமுகவுக்கு எதிர்ப்பு தான்.. ஆனால் தனித்தனியாக பிரிந்திருந்தால் பிரயோஜனம் இல்லை.. அரசியல் விமர்சர்கள் கருத்து..!

ஜனவரி 14, 2026, 11:20
parasakthi2

பராசக்தி படத்தால் உடையுது திமுக கூட்டணி? படத்தில் உள்ள ஒவ்வொரு வசனமும் காங்கிரஸ்காரர்களை கொதிக்க வைத்துள்ளது.. திமுக கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று போர்க்கொடி.. திருச்சி வேலுசாமியை கைது செய்ய பயமா? அன்னைக்கு கோட்டைக்கு வழி சொன்னது பராசக்தி கருணாநிதியின் வசனங்கள்.. இன்னைக்கு கூட்டணியை ரோட்டுக்கு கொண்டு வருகிறது சிவகார்த்திகேயனின் பராசக்தி! இதுதான் காலத்தின் கட்டாயமா?

ஜனவரி 13, 2026, 20:15
vijay udhayanidhi stalin

பயப்படுறவன் தான் சத்தம் போடுவான்… பயமுறுத்துறவன் மௌனமா தான் இருப்பான். ஆரம்பிக்கலாமா? திமுகவை விஜய்யால் வீழ்த்தவே முடியாது.. ஆனால் திமுகவை விஜய்யால் பயப்பட வைக்க முடியும்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவை விட விஜய் மீது திமுக அதிகமாக பயப்படுது.. திமுக ஆட்சியை பிடித்தாலும் இன்னும் ஒரு 20 வருஷத்துக்கு திமுக vs தவெக தான் தமிழக அரசியல்..!

ஜனவரி 10, 2026, 11:25
Tiruparankundram

நீதிமன்றம் சொன்னபடி ஒரு தீபம் ஏற்றி பிரச்சனையை முடித்திருக்கலாமே.. ஏன் இவ்வளவு குழப்பம்? ஒரு மதச்சார்பற்ற கட்சி அனைத்து மதங்களுக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும்.. சிறுபான்மையருக்கு மட்டும் ஆதரவாக இருந்தால் அதற்கு பெயர் மதச்சார்பற்ற கட்சியா? அரசியல் விமர்சகர்கள்

ஜனவரி 9, 2026, 20:14
parasakthi

‘பராசக்தி’ படமே காங்கிரசுக்கு எதிரான படம்.. இந்தி எதிர்ப்பு போராட்டமே அன்றைய மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசுக்கு எதிரான நடந்த போராட்டம் தான்.. திமுகவுக்கு காங்கிரஸ் தோழமை கட்சி அல்ல என்பதை இன்றைய Gen Z தலைமுறையினருக்கு விவரிப்பதே ‘பராசக்தி’ திரைப்படம்.. ஆட்சியில் பங்கு கேட்டு வலியுறுத்தும் காங்கிரசுக்கு பதிலடி தான் இந்த படம்.. அரசியல் விமர்சகர்கள்..

ஜனவரி 9, 2026, 16:45
vijay eps mks

திமுக கூட்டணி அப்படியே இருக்கும், உடையாது.. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, அமமுக வந்துரும்.. இந்த 2 ரெண்டு கூட்டணியும் இறுதியாகிவிட்டால் விஜய்யை ஊடகங்கள் மறந்துடும்.. விஜய்யும் வெளியே வரமாட்டேங்கிறார்.. அப்ப அதிமுக – திமுகவுக்கு தான் போட்டி மாறும்.. விஜய் ஏதாவது ஆக்டிவ்வா பண்ணிகிட்டே இருக்கனும்.. இல்லைன்னா மக்களும் மறந்துடுவாங்க, ஊடகங்களும் மறந்துடும்.. அரசியல் விமர்சகர்கள்..!

ஜனவரி 9, 2026, 15:10
pc stalin

ஆட்சியில் பங்கு கிடையாது.. நாங்க கொடுப்பது சீட் எண்ணிக்கை.. இஷ்டம் இருந்தா இருங்க.. இல்லாட்டி போய்க்கோங்க.. கறாராக சொல்லிவிட்டாரா ஸ்டாலின்.. அப்படியும் வெளியே போக யோசிக்கிறதா காங்கிரஸ்.. கடைசியில் சரி கொடுக்குறத கொடுங்க என்று வாங்கி கொள்ளுமா? முடிவெடுக்க முடியாமல் திணறுகிறதா காங்கிரஸ் தலைமை?

ஜனவரி 9, 2026, 14:57
vijay udhayanidhi stalin

விஜய்யை சீண்டாம சும்மா விட்ருந்தா கூட அவர் தோத்தவுடன் அரசியலை விட்டு போயிருப்பாரு.. பந்து அடிக்க அடிக்கத்தான் எழும்பும்.. விஜய்யை சீண்ட சீண்ட அவர் வளர்கிறார்.. எம்ஜிஆரிடம் செய்த அதே தவறை விஜய்யிடம் திமுக செய்கிறதா? 75 வருட பாரம்பரிய கட்சி விஜய்யிடம் பயப்படுவது ஏன்? ஸ்டாலினா? விஜய்யா? என்றால் ஸ்டாலின் எளிதில் வெற்றி பெற்றிடுவார்.. ஆனால் உதயநிதியா? விஜய்யா? என்று வரும்போது தான் சிக்கல்.. அரசியல் விமர்சகர்கள்..!

ஜனவரி 8, 2026, 18:14