திமுக ஆட்சியில் லஞ்சம் வாங்கியவர்கள் கட்சி பதவியை மட்டும் இழந்தார்கள்… இன்று தவெக ஆட்சியில் லஞ்சம் வாங்க நினைத்தாலே பதவி நிரந்தரமாக பறிபோகும்.ஆகஸ்ட் 22, 2026, 08:30
முதலமைச்சர் விஜய்யிடம் யாரும் டீல் பேச முடியாது.. பக்கத்தில் கூட நெருங்க முடியாது.. ஊழல் செய்தவர்களை உண்மையாகவே தண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறார்.. அதுதான் இப்போது எதிர்க்கட்சிகளுக்கு சிக்கல்..ஆகஸ்ட் 21, 2026, 07:30
இந்தியாவிலேயே அதிகமாக பார்ட்டி பண்ட் வாங்கிய மாநில கட்சி திமுக தான்.. 364 கோடி ரூபாய் யார்கிட்ட வாங்குனீங்க.. மக்களிடம் தைரியமாக சொல்ல முடியுமா?ஆகஸ்ட் 8, 2026, 18:39
ஆண்டவன் ரெண்டு கை கொடுத்தது உழைச்சு சாப்பிடத்தான்… கை நீட்டி லஞ்சம் வாங்க அல்ல.. லஞ்சத்தை அரசு ஒழிக்க முயன்றா அதுக்கு எதிரா போராடுவீங்களா? கூகுள் பேல்ல அனுப்புனாலும், கையில காசு வச்சிருந்தாலும் அரசு கணக்கு கேட்கத்தான் செய்யும்.. அவ்வளவு சிரமமா இருந்தா அரசு வேலையை விட்டுட்டு போயிருங்க.. எங்கள் இளைஞர்கள் லஞ்சம் வாங்காம உழைக்க தயாரா இருக்காங்க.. அவங்களை வச்சி அரசை நடத்திக்கிறோம்…ஜூலை 26, 2026, 07:59
ஊழலை முதலில் கையில் எடுத்தால் தான் அதிமுக, திமுக ரெண்டுமே அலறும்.. மக்களும் ரசிப்பார்கள்.. ஊழல்வாதிகளை ஒழித்துவிட்டால் அதுவே மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று கொடுக்கும்… தேர்தல் வாக்குறுதிகளை தாமதமாக நிறைவேற்றினாலும் மக்கள் கண்டுகொள்ள மாட்டார்கள்.. முதல்வர் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ராட்டஜி..ஜூலை 18, 2026, 07:40
நான் ஒரு தடவை தான் சொல்லுவேன்… ஒரே தடவை தான் சொல்லுவேன்! ஏன்னா, ரெண்டாவது தடவை என் ஆக்ஷன் பேசும்! அப்புறம் நீயும் இருக்க மாட்ட, உன் திமிரும் இருக்காது! யாராவது லஞ்சம் வாங்கினா, புகார் கொடுத்து, அதை விசாரிச்சுகிட்டு நேரத்தை கடத்த விரும்பாத அரசு.. லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டால், வீடியோ வெளியானால் உடனே டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட்.. லஞ்சம் வாங்கினா வேலை போயிடுங்கிற பயம் வந்தாலே 90% லஞ்சம் ஒழிஞ்சிடும்… இன்று கூட லஞ்சம் வாங்கியதாக வெளியான வீடியோவால் தவெக நிர்வாகி வீராசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.. தப்பு செஞ்சவரு தவெகவாக இருந்தாலும் சரி நடவடிக்கை தான்.. இதுதான் விஜய் ஆட்சி..ஜூலை 15, 2026, 17:45
ஊழலை ஒழிக்கவே முடியாது, சிஸ்டம் சரியில்லைன்னு சொல்லிகிட்டு வீட்ல இருக்க கூடாது.. களத்துல இறங்குனா ஊழலையும் ஒழிக்கலாம், சிஸ்டத்தையும் சரி செய்யலாம்.. 50 வருஷத்தில் யாருக்கும் வராத துணிச்சல் விஜய்கிட்ட இருக்குது.. ஊழலை ஒழிக்கனும்ன்னு களத்துல விஜய் இறங்குன உடனே எல்லா கட்சியும் விஜய்க்கு எதிரா ஒன்னு சேருதுன்னா என்ன அர்த்தம்…ஜூலை 14, 2026, 13:59
நீங்கல்லாம் மத்தவங்களை பார்த்து காப்பி அடிக்கிறவங்க… நாங்க மத்தவங்களை காப்பி அடிக்க வைக்கிறவங்க! லஞ்சம் கொடுக்காதீங்கன்னு இதுவரைக்கும் எந்த முதல்வராவது சொல்லி இருக்காங்களா? இந்தியாவிலேயே வித்தியாசமான முதல்வர் விஜய்.. விஜய்யை பார்த்து தான் இனி எல்லாரும் காப்பி அடிப்பாங்க… அரசியலுக்கு அனுபவம் தேவையில்லை.. மக்களுக்கு நல்லது செய்யனும்ங்கிற உண்மையான மனசு வேனும்.. அந்த மனசு நம்ம முதல்வர்கிட்ட இருக்குது…ஜூலை 12, 2026, 08:10
பாக்கத்தானே போறீங்க இந்த விஜய்யோட ஆட்டத்தை… யாரோட ஆளு, எவ்ளோ பணம்னு பார்த்து வேலை நடந்த காலம் போயி… என்ன பேப்பர் இருக்கு, என்ன தகுதி இருக்குன்னு பார்த்து வேலை நடக்குது! தலைமை செயலகத்தையே தலைகீழா மாத்தின இந்த சிஸ்டம் சேஞ்ச்… நிஜமாலே வேற லெவல் மாஸ்! காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும்னு இருந்த இடத்துல, இப்போ ‘நோ ரெக்கமண்டேஷன், நோ லஞ்சம்’னு புது இலக்கணம் எழுதியிருக்காரு முதல்வர் விஜய்! இந்த வேகம் வெறும் செக்ரட்டேரியட்டோட நிக்காது… தமிழ்நாடு முழுக்க பரவப்போற சொர்க்க பூமியோட ஆரம்பம் இது!ஜூலை 7, 2026, 08:25
சிங்கப்பூர்ல போய் நெஞ்சு வலிக்குதுன்னு போய் உட்கார்ந்தாலும் சரி, உகாண்டா நாட்டுல உடம்பு வலிக்குதுன்னு போய் உட்கார்ந்தாலும், உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தூக்குவோம்.. தப்பு செஞ்சுட்டு வெளிநாட்டு போய் செட்டிலாகிவிடலாம்ன்னு கனவுல கூட நினைக்காதீங்க.. மத்திய அரசு உதவி செய்யலைன்னாலும் பரவாயில்லை.. மாநில அரசின் அதிகாரங்களை வைத்து எப்படி ஊழல்வாதிகளை சிறையில் தள்ளனும்ங்கிறது எங்களுக்கு தெரியும்.. தவெக செய்தி தொடர்பாளர்கள் ஆவேச பேட்டி..ஜூலை 5, 2026, 13:47
முதல்வன் பட வசனம் தான் ஞாபகம் வருது.. எவ்ரிபடி.. ஒரு முன்னாள் அமைச்சர் விடாம எல்லோரும் ஊழல் செஞ்சிருக்காங்க.. இப்ப லேட்டஸ்ட்டா சிவசங்கருக்கு பறந்துருக்கு சம்மன்.. அவரோட உதவியாளர்ன்னு சொல்லி ஒருத்தர் லட்சக்கணக்குல மோசடி செஞ்சிருக்கார்.. உதவியாளர்ன்னு மட்டும் உறுதியாச்சு, சிவசங்கர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவே முடியாது…ஜூலை 1, 2026, 11:59
சினிமாவுல கூட கிராபிக்ஸ் வச்சுத்தான் ரோடு போடுவாங்க… ஆனா நீங்க பேப்பர்லயே ரோடு போட்டு 30 கோடியை சுருட்டியிருக்கீங்க! மீடியாவுல வந்த உடனே அவசர அவசரமா தார் ஊத்துனா தப்பு மறைஞ்சிடுமா? நீங்க போட்டது தரம் இல்லாத ரோடு… ஆனா இந்த விஜய் போடப்போறது உங்களுக்கு தப்பிக்கவே முடியாத இரும்பு ரோடு!ஜூன் 27, 2026, 08:25