Tag: annamalai

vijay annamalai

2026ல் விஜய் சொல்லி அடிச்ச மாதிரி அண்ணாமலை 2031ல் சொல்லி அடிப்பார்.. விஜய்யை விட அண்ணாமலை கட்டமைப்பு வித்தியாசமாக இருக்கும்.. திமுக, அதிமுக மீதான வெறுப்பில் தான் மக்கள் விஜய்க்கு ஆதரவு அளித்தார்கள்.. விஜய் சிறந்த நிர்வாகி என்பதற்காக அல்ல.. ஆனால் அண்ணாமலை விஷயம் அப்படியல்ல.. படிப்பு, நிர்வாக திறமை, பொது அறிவு, அரசியல் அறிவு, உடனடியாக முடிவெடுக்கும் திறன், பத்திரிகையாளர்களை வச்சு செய்யும் திறமை, மக்கள் ஆதரவு எல்லாமே இருக்குது.. பாஜக அவரை மிஸ் செய்துவிட்டது.. தமிழக மக்கள் மிஸ் செய்ய மாட்டார்கள்.. அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்…

ஜூன் 2, 2026, 19:05
vijay vs annamalai 3

எம்ஜிஆர் – கருணாநிதி போல்.. ஜெயலலிதா – ஸ்டாலின் போல்.. இனி தமிழ்நாட்டு அரசியல் விஜய் – அண்ணாமலை.. ஒருவர் பெரியார் ஆதரவாளர், இன்னொருவர் ஆன்மீக ஆதரவாளர்.. ஒருவர் சினிமாவில் பிரபலம், இன்னொருவர் ஐபிஎஸ் மூலம் பிரபலம்.. ஒருவர் அமைதியாக அரசியல் செய்வார், இன்னொருவர் அதிரடி அரசியல் செய்வார்.. ரெண்டு பேருக்கு இடையேதான் போட்டி.. ஒன்னு விஜய், இன்னொன்னு அண்ணாமலை.. அரசியல் களம் மாறுகிறது…

ஜூன் 2, 2026, 16:31
annamalai

டெல்லியில உட்கார்ந்து நீங்க போடுற கணக்கு எல்லாம் காஷ்மீர் முதல் ஆந்திரா வரைக்கும் தான் செல்லுபடியாகும்… இது தமிழ்நாடுடா! இங்க உள்ளூர் சிங்கத்தோட பேச்சை கேட்காம அமித்ஷா காட்டுன ‘சாணக்கியத்தனம்’ இப்போ மக்கள் மன்றத்துல அசிங்கப்பட்டு போய் நிக்குது! கடைக்கோடி தொண்டனுக்கு தெரிஞ்ச எதார்த்தம் கூட அமித்ஷாவுக்கு தெரியாம போனதுதான் ஆச்சரியம்! அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளரா நிறுத்தியிருந்தா, இன்னைக்கு நடுநிலையாளர்களின் சரிபாதி ஓட்டுகள் விழுந்து கோட்டையே அதிரும்படி மாஸ் காட்டியிருப்போம்!

ஜூன் 1, 2026, 17:49
annamalai vs vijay

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் இப்போதே 1 கோடி ஓட்டுகள் Confirm என்று ஒரு தனியார் சர்வே நிறுவனம் அடித்து சொல்கிறது… 30 லட்சம் பேர் இப்போதே உறுப்பினராக இணைத்து கொள்ள தயாராக இருப்பதாகவும் சொல்றாங்க.. முடிவு அண்ணாமலை IPS கையில் .. தமிழகத்தின் எதிர்கால அரசியல் விஜய் – அண்ணாமலை தான்.. உதயநிதி ஓரமாக போகவும்.. ஸ்டாலின், எடப்பாடி ஓய்வு எடுக்கவும்.. ரெண்டு இளைஞர்கள் மாறி மாறி தமிழ்நாட்டை பாத்துக்கிடுவாங்க…

ஜூன் 1, 2026, 14:30
vijay tvk 40

திமுக -பாஜக கூட்டணி நடந்தால் அண்ணாமலை வெளியேறுவது உறுதி.. அண்ணாமலை வெளியேறினால் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அவருடன் வந்துவிடுவார்கள்.. அப்புறம் அரை பெர்சண்ட் ஓட்டு கூட பாஜகவிடம் இருக்காது.. அதை வைத்து திமுக என்ன செய்யும்? தேமுதிகவை யாரும் சேர்க்க மாட்டார்கள்.. அதனால் அந்த கட்சி திமுகவுடன் ஒட்டிக்கொள்ளும்.. எப்படி ஜெயிப்பீங்க ஸ்டாலின்? இந்த பக்கம் தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக், மதிமுக இருக்கும்.. இன்னொரு பக்கம் அதிமுக, அமமுக, பாமக இருக்கும்.. போகிற போக்கை பார்த்தால் தவெக கூட்டணி 40க்கு 40 அடிச்சிரும் போல தெரியுதே..

ஜூன் 1, 2026, 13:55
vijay vs annamalai 3

அரசியல் செய்ய பணம் தேவையில்லை என்பதை விஜய் நிரூபித்துவிட்டார்.. நேர்மை, இளைஞர்களை கவரும் கொள்கைகள் மட்டும் இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதையும் விஜய் நிரூபித்துவிட்டார்.. இந்த இரண்டும் தான் அண்ணாமலைக்கு தரும் நம்பிக்கைகள்.. நேர்மை, இளைஞர்களை கவரும் கொள்கையோடு விஜய்க்கு இல்லாத ஒன்று அண்ணாமலையிடம் உள்ளது.. அதுதான் ஐபிஎஸ் அனுபவம் மற்றும் அரசியலில் ஆழமான அறிவு.. தனிக்கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்கினால் தமிழக அரசியலில் எதிர்காலம் விஜய் – அண்ணாமலை தான்.. ரெண்டு திராவிட கட்சிகளும் காணாமல் போய்விடும்..

மே 31, 2026, 16:08
vijay annamalai rajini

விஜய்யை வீழ்த்த இனி திராவிட கட்சிகளால் முடியாது.. இறக்குங்கடா ரஜினியை.. ரஜினியை சந்திக்கிறாரா அண்ணாமலை.. ரஜினி – அண்ணாமலை இணைந்து புதிய அரசியல் கட்சியா? விஜய் கட்சிக்கு சவாலாக இருக்குமா? மக்கள் ஆதரவு பெற்ற ரஜினிகாந்த்.. அதிரடி அரசியல் செய்யும் அண்ணாமலை.. இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? மொத்தத்தில் திராவிடத்தை விரட்டினால் போதும்.. பொதுமக்கள் கருத்து…!

மே 29, 2026, 14:47
vijay vs annamalai

விஜய்க்கு இப்போதைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.. தமிழகத்தில் இருந்து 2 திராவிட கட்சிகளையும் விரட்டி விடனும்.. அதுக்கு அப்புறம் விஜய்யா? அண்ணாமலையான்னு பார்த்திடலாம்.. விஜய் சந்திப்புக்கு பின் டெல்லி மேலிடம் முடிவு… 2031 தேர்தல் விஜய் அண்ணாமலை என மாறுமா? திமுகவும் அதிமுகவும் அவ்வளவு சீக்கிரம் தங்கள் இருப்பிடத்தை விட்டுக்கொடுக்குமா? மக்கள் கையில் தான் எல்லாமும்…

மே 28, 2026, 09:58
vijay vs annamalai

தவெகவுக்கு ஒரு நல்ல எதிர்கட்சி தேவை. இரண்டு கழகங்களும் மிரண்டு போய் சரிவை நோக்கி செல்வதால் எதிர்க்கட்சியாக இருக்க தகுதியில்லை. அரசு தவறு செய்யும்போது அதை தட்டிக் கேட்க ஒரு நல்ல தலைவர் நமக்கு தேவை. அந்த தலைவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லாத மிஸ்டர் க்ளீனாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அண்ணாமலை களத்தில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இனியும் பாஜகவை நம்பி காலம் கடத்தாமல் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க வேண்டும்.. தவெக ஆளும் கட்சி, அண்ணாமலை எதிர்க்கட்சி, திராவிடம் இல்லா ஆரோக்கிய அரசியல் தமிழகத்தில் நடக்கும்..

மே 23, 2026, 07:23
vijay annamalai

2026-லாம் சும்மா ஒரு சாம்பிள் தான் தம்பி… உண்மையான போர் 2031-ல தான் இருக்கு! ஒரு பக்கம் சினிமா பாப்புலாரிட்டியோட வந்து ஆட்சியில் பட்டையை கிளப்பும் தவெக, இன்னொரு பக்கம் தேசபக்தியோட நிக்கிற பாஜக. அண்ணாமலையா? விஜய்யா? கோட்டை யாருக்குன்னு களம் முடிவு பண்ணட்டும்… பார்த்துடலாம்.. விஜய்,அண்ணாமலை ரெண்டு பேருல யாரு வந்தாலும் ஓகே தான்.. தமிழ்நாட்டில் திராவிடம் ஒழிஞ்சா போதும்..

மே 16, 2026, 15:37
vijay udhayanidhi

உதயநிதியை அவ்வளவு எளிதில் முதல்வர் சீட்டில் உட்கார வைக்க முடியாது.. உதயநிதிக்கு சிம்மசொப்பனமாக ஒரு பக்கம் விஜய் இருப்பார்.. இன்னொரு பக்கம் அண்ணாமலை இருப்பார்.. இவர்கள் இருவரையும் கடந்த உதயநிதி முதல்வர் ஆகிவிடுவாரா? ஸ்டாலின் பெரிய எதிர்ப்பு இல்லாமல் முதல்வராகிவிட்டார்.. அந்த அதிர்ஷ்டம் உதயநிதிக்கு இருக்கிறதா?

மே 3, 2026, 18:30
annamalai

மத்திய கேபினட் அமைச்சராகுறாரா அண்ணாமலை? திமுக ஆட்சி தொடர்ந்தால் அண்ணாமலையின் அதிகார மையம் ஆட்டி படைக்குமா? பதவி இல்லாத போதே திமுகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்.. மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் ருத்ரதாண்டவம் ஆடுவாரோ?

ஏப்ரல் 30, 2026, 18:16