Categories: சமையல்

வாழ்க்கையில ஒருமுறையாவது மொறு மொறு இனிப்பு சமோசா சாப்பிட்டு பாருங்க!

குழந்தைகள் முதல் வெளியவரிகள் வரை அனைவருக்கும் சமோசானு சொன்னானே பிடிக்கும், அதிலும் இனிப்பு சமோசானா சொல்லவே வேண்டாம். குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு சமோசா வீட்டில் செய்யலாமா..

தேவையான பொருட்கள் :

மைதா மாவு -கால் கிலோ
தேங்காய் துருவல் -கால் கப்
வெல்லம் கால் கிலோ
எண்ணெய் – 1 கப்
ஏலக்காய் 2
உப்பு – சிறிதளவு

அரை கப் ரவா இருக்கா? ஈவினிங் ஸ்நாக்ஸ் 5 நிமிடத்தில் ரவா கட்லெட் ரெடி!

செய்முறை :

முதலில் மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் , உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு பாகு தயாரிக்கவும் பின்பு அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்றாகக் கிளறி கொள்ளவும்.

பின்பு தண்ணீர் வற்றி போகும் வரை கொட்டியாக கிளறவும் அதில் ஏலாக்காயை பொடி போட்டு கலக்கி தேங்காய் பூரணத்தை இறக்கி ஆற வைக்கவும்.

பூரணம் ஆறியதும் அதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மைதா மாவை முக்கோண வடிவில் தேய்த்து வெட்டிக் கொள்ளவும். பின்பு உருட்டி வைத்துள்ள தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து மூடி சமோசா வடிவம் போல் செய்யவும்.

ஆறு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத இன்ஸ்டன்ட் இட்லி மாவு!

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிடவும். மைதா இனிப்பு சமோசா ரெடி…

Published by
Velmurugan

Recent Posts