பொழுதுபோக்கு

ரெண்டே நாளில் பின்னணி இசையைப் போட்டு முடித்த இளையராஜா… அட அது அந்தப் படமா?

ஒரு படத்திற்கு ரீ ரிக்கார்டிங் வேலையை ரெண்டே நாளில் முடிப்பது என்றால் ஆச்சரியம் தான். அதுவும் செம மாஸான படம். இசைஞானி இளையராஜா ஒருவரால் தான் இது போன்ற சாதனைகளை எல்லாம் நிகழ்த்த முடியும். பாடல்கள் எல்லாமே பட்டையைக் கிளப்பும் ரகம். அது எந்தப் படத்திற்கு என்று தெரியுமா? கரகாட்டக்காரன்.

ஒரு வருடத்திற்கு மேலாக ஓடி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய படம். இந்தப் படத்தின் இயக்குனர் கங்கை அமரன். இவர் இளையராஜாவின் தம்பி. அண்ணன் இந்தப் படத்திற்கு எப்படி எப்படி எல்லாம் இசை அமைத்தார் என்பதை சுவாரசியமாக சொல்கிறார். வாங்க, பார்க்கலாம்.

இளையராஜா பயங்கரமான அறிவாளி. கரகாட்டக்காரன் படத்துக்கு மாங்குயிலே, பூங்குயிலே, இந்த மான், முந்தி முந்தி என பாடல்களைப் போட்டுக் கொடுத்தார். மெலடி சாங்கிற்கு முந்தி முந்தி பாட்டு. தீயில மிதிக்கிற மாதிரி ஒரு பாட்டு. கரகாட்டக்காரன் கதைன்னு சொன்னேன். என்னடா கரகாட்டக்காரன்னு கேட்டு மியூசிக் போட்டாரு.

Karakattakkaran

கதையைக் கேட்காமலேயே படத்திற்கு இசை அமைக்க ஒத்துக் கொண்டார். ஒரு ரீ ரிகார்டிங் ரெடி பண்ணிருக்கோம். மறுநாள் படம் இல்லை. திங்கள் கிழமை தான் ரீரிக்கார்டிங். “டேய், உன் படம் ரெடியா?” ன்னு கேட்டார். ரீரிக்கார்டிங் போறோம். சிரிச்சியே விழுந்து காரைப் பார்த்த உடனே “டேன்ட டக்கன டேன்டன் டேன்”னு மியூசிக் போட்டாரு.

தியேட்டர் புல்லா விசில். இன்டர்வெல் வரைக்கும் பின்னி எடுத்துட்டாரு. செகண்ட் ஆஃப் அடுத்தநாள். ரெண்டே நாள்ல ரீரிக்கார்டிங்க முடிச்ச படம் அது தான்.

என் மேல நம்பிக்கை உண்டு. ஆனா அதை நேரடியா சொல்ல மாட்டாரு. கதை நல்லா எழுதிருப்பான்னு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1989ல் ராமராஜன், கனகா நடிக்க கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான படம் கரகாட்டக்காரன். இந்தப் படத்தில் நகைச்சுவையும், கிராமிய பின்னணி கொண்ட கதையும் பட்டையைக் கிளப்பும். கவுண்டமணி, செந்தில், காந்திமதி உள்பட பலரும் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சக்கை போடு போட்டன.

Published by
Sankar

Recent Posts