கேப்டன் விஜயகாந்துக்காக கதை எழுதிய ரமேஷ் கண்ணா.. சூர்யா நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் இதுவா?

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஒரு ஏணிப்படியாய் விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த். அவர் எப்படிப்பட்ட மனிதராக வாழ்ந்தார் என்பது அவரின் இறப்பில் தமிழகமே அறிந்தது. அப்படிப்பட்ட கேப்டன் திரையுலகத்தில் ஒரு இயக்குனரிடம் கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டார் என்றால் அவர் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் பாருங்கள். அந்த இயக்குனர் வேறு யாருமல்ல. பிரபல நடிகரும், கே.எஸ். ரவிக்குமாரின் உதவியாளருமான ரமேஷ் கண்ணா தான். விஜயகாந்துடன் ரமேஷ் கண்ணா வானத்தைப்போல, மரியாதை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். வானத்தைப்போல படத்தில் இவர்களது காமெடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கும்.

இந்நிலையில் முதன் முதலாக படம் இயக்குவது பற்றி ரமேஷ் கண்ணா நடிகர் விவேக்கிடம் பேசியிருக்கிறார். அப்போது விவேக் கேப்டனின் நண்பரான ராவுத்தரை சந்தித்து கதை கூறுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி ரமேஷ் கண்ணா ராவுத்தரை சந்தித்து கதை கூறிய நிலையில் அப்போது தர்ம சக்கரம் படப்பிடிப்பில் பொள்ளாச்சியில் இருந்த கேப்டனை சந்தித்து கதை கூறலாம் என எண்ணி அவரை சந்தித்திருக்கிறார்.

அப்போது’ “நீ என்கிட்ட கதை சொல்ல வேணாம்.. உன்னை பற்றி எனக்கு நல்லா தெரியும்.. எப்ப கால்ஷீட்ன்னு” என்று ரமேஷ் கண்ணாவிடம் கூற அவர் நெகிழ்ந்து போயிருக்கிறார். அதன் பின்னர் காலங்கள் கடந்தது. கேப்டன் விஜயகாந்தும் அரசியல் பக்கம் வர அந்த கதை அப்படியே நின்றது.

அஜீத்தின் ‘வரலாறு’ பட பெண்மை தன்மை கதாபாத்திரம் உருவாக காரணமான மூன்று நடிகர்கள்..அசத்திய AK

அதன் பின் சில வருடங்களுக்குப் பிறகு எந்த கதையை கேப்டனுக்காக ரமேஷ் கண்ணா எழுதி வைத்திருந்தாரோ அதே கதை பின்னாளில் சூர்யா நடிப்பில் ஆதவன் படமாக வெளிவந்தது. இந்த படத்தினை அவரின் குருநாதர்  கே.எஸ். ரவிக்குமார் இயக்கி இருப்பார்.

மேலும் அவரின் கட்சியில் இணைய ரமேஷ் கண்ணா கேப்டனிடம் கேட்ட பொழுது, “நீ என் கட்சியில் இருந்தால் உனக்கு மற்ற கட்சியில் உள்ள திரை துறையினர் படம் தர யோசிப்பார்கள். அது உன் வளர்ச்சியை பாதிக்கும். எனவே வேண்டாம்” என அன்பாக மறுத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த். இப்படி ரமேஷ் கண்ணா கேப்டன் விஜயகாந்த் உடனான உறவுகளை அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

Published by
John

Recent Posts