விஜய்க்கு போட்டியாக புத்தாண்டு அன்று களமிறங்கும் விடாமுயற்சி! பர்ஸ்ட் லுக் அப்டேட்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படம் இந்த ஆண்டு துவக்கத்தில் பொங்கலை முன்னிட்டு மிக பிரமாண்டமாக வெளியாகி 300 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 62வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அஜித்தின் பிறந்தநாள் அன்று மே ஒன்றாம் தேதி நடிகர் அஜித் தனது 62 ஆவது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என உறுதியான தகவல் வெளியானது.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பிரீ ப்ரொடெக்ஷனில் ஏற்பட்ட சில தாமதங்களினால் படத்தின் படப்பிடிப்புகள் நான்கு மாதங்களுக்கு மேலாக தள்ளிப்போனது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்ற நடைபெற தொடங்கியது. அஜர்பைஜானில் தொடங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சிறப்பாக முடிவடைந்த நிலையில் தற்பொழுது படக்குழு சென்னையில் ஓய்வில் இருந்து வருகிறது.

அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஏழாம் தேதி துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது . இந்த படப்பிடிப்பில் நடிகர் அஜித்துடன் நடிகை திரிஷா நடிகை பிரியா பவானி சங்கர்,நடிகர் அர்ஜுன், நடிகர் ஆரவ், நடிகர் ரெஜினா என பல முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 70 நாட்கள் நடைபெற இருப்பதாகவும் அத்துடன் இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் தல அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக ஒரு பக்கத்தில் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த விடாமுயற்சி திரைப்படம் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட திரில்லர் படமாக அமையும் என்றும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தல அஜித்தின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. விடாமுயற்சி படத்தின் கதை, சக நடிகர்கள் என எந்த அப்டேட்டும் வெளியிடாமல் படக்குழு ரகசியம் காத்து வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் அப்டேட் தல ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31ம் தேதி மாலை வெளியாகும் அல்லது புத்தாண்டை முன்னிட்டு காலை வழியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மனைவி சங்கீதா சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த இயக்குனர் படத்தில் நடித்த தளபதி!

அதைத்தொடர்ந்து இந்த படத்தின் டீசர் பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அசுர வேகத்தில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவாக முடியும் பட்சத்தில் இந்த படம் தமிழ் புத்தாண்டு அல்லது தல அஜித் அவர்களின் பிறந்த நாள் ஆன மே ஒன்றாம் தேதி வெளியிட லைக்கா நிறுவனம் தயாராக உள்ளது.

மேலும் விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் அதே நாள் தான் நடிகர் விஜய் அவர்களின் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வழியாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.