எப்போ யார் மேல வருவாங்கன்னு யாருமே சொல்ல முடியாது.. விஜய்யை இந்த விஷயத்தில் பின்னுக்குத் தள்ளிய சூர்யா!..

சமூக வலைதளங்களின் ராஜாவாக நம்பர் ஒன்னாக வலம் வந்த விஜய்யை நடிகர் சூர்யா அசால்ட்டாக அந்த ஏரியாவிலேயே முந்தியிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கோலிவுட்டில் சோஷியல் மீடியா கிங் என திகழும் விஜயின் போஸ்ட்டுகள் வியூஸ் மற்றும் லைக்குகள் என சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்து விடும். லியோவின் வெற்றிவிழாவில் விஜய் தான் பாடிய பாடலுக்கு எதிர்ப்பு தெறிவித்ததற்கு பதிலடி கொடுக்கும்படி பேசியிருந்தார். அந்த பாடலில் குழந்தைகள் தவறான சொற்களை கற்றுகொள்வார்கள் என்று குற்றசாட்டுகள் எழும்பிய நிலையில் எல்லா சொற்களையும் எடுத்துவிட்டு டவ்டவென படலை முடித்தனர். வெற்றிவிழாவிலும் அதேபோல் விஜய் பாடியிருந்தார்.

விஜய்யை ஓரங்கட்டிய சூர்யா

நடிகர் விஜய்யும் சூர்யாவும் இணைந்து நேருக்கு நேர், ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர். அதிலும் இருவரும் நேசமணி வடிவெலுடன் நடித்த காமடி சீன்கலுக்கு எண்ண முடியாத அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். எல்லா நடிகர்களும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் ரசிகர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ்களையும், வியூஸ்களையும் அதிகம் கவனித்து எந்த நடிகர் பெரிய நடிகர் என்கிற போட்டியில் அடித்துக் கொண்டு இருக்கின்றனர். பிற நடிகர்களை இழிவுப்படுத்தி வருகின்றனர். மேலும் மற்றொரு நடிகர் இந்த நடிகரை விட மேலே செல்லும்போது அவரது ரசிகர்கள் ட்ரோல் செய்கின்றனர்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ ட்விட்டரில் வெளியிடப்பட்டு அந்த வீடியோ 26 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இந்தியாவிலேயே முதன் முதலாக 25 மில்லியன் வீடியோவை கடந்த வீடியோ ட்வீட் அதுதான் என விஜய் ரசிகர்கள் கெத்து காட்டி வந்தனர்.

இந்நிலையில், சூர்யா பதிவிட்ட வீடியோ போஸ்ட் விஜய் வாரிசு ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிட்ட செல்ஃபி வீடியோவின் வியூஸை ஈசியாக தாண்டியுள்ளது.
நடிகர் சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ள புறநானூறு படத்தின் அறிமுக வீடியோவை சோஷியல் மீடியாவான ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சில வாரங்களிலேயே 26 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து விஜய்யின் சாதனயை சர்வ சாதாரணமாக முறியடித்துள்ளது. அதே போல் விஜய்யின் லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் விரைவில் சூர்யா கங்குவா மற்றும் புறநானூறு படம் மூலமாக முறியடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...