விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இணைந்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமான மாவீரன் வெற்றியின் உச்சத்தில் வசூல் சாதனை படைத்து வருகிறது. மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

லியோவில் பல நடிகர்கள் கேமியோவில் நடிப்பது குறித்து தொடர்ந்து செய்திகள் வருவதால், இந்த கேள்வி ஆச்சரியமாக இல்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தில் தினம் தினம் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கேமியோவில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனிடமும் இந்த கேள்வியை மீடியாக்கள் கேட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தற்பொழுது மாவீரன் குழுவுடன் இணைந்து வெற்றியைக் கொண்டாடி வருகிறார். ஊடக தொடர்புகளில் பங்கேற்று வருகிறார். அப்போது சிவகார்த்திகேயனிடம் ஒரு நிருபர் நீங்கள் லியோ படத்தில் ஒரு பகுதியாக நடித்துள்ளீர்களா என்று ஒரு கேள்வியை கேட்டார்.

அதற்கு லியோ படத்தில் நடிக்க வில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் லியோ படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் தான் தற்போது சிவகார்த்திகேயன் இருப்பதாகவும் பகிர்ந்து கொண்டார். அவர் இதை கூறியபோது, ​​​ லியோவில் சிவாவும் நடித்திருப்பார் என பலரும் நினைக்க தொடங்கினர்.

யுவன் இசையில் ஓப்பனிங் பாடலை பாடும் விஜய்! மாஸ் அப்டேட்!

ஆனால் இந்த தகவல்கள் வெறும் வதந்தி என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. லியோவில் பெரும்பகுதி காஷ்மீரில் படமாக்கப்பட்டது. லியோ படப்பிடிப்பு நடந்த அதே இடத்தில் தான் சிவகார்த்திகேயன் தற்போது தனது அடுத்த படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார் என்பது தான் உண்மை.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews