சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன ஒரே வார்த்தை.. சரித்திரம் படைத்த அஜித்!

தமிழ் சினிமாவில் மிக துள்ளலான நடிகரான அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் துணிவு. வினோத் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பின் தற்பொழுது அஜித் தனது 62வது திரைப்படத்தில் முழு கவனத்துடன் ஈடுபட்டு வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாள் அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். வேதாளம், விவேகம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து அனிருத் விடாமுயற்சி திரைப்படத்திலும் இணைந்துள்ளார்.

அஜர்பைஜானில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் சிறப்பாக முடிவடைந்து தற்பொழுது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த இருப்பதாகவும் இத்துடன் இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்ட முயற்சித்து வருகிறது. நடிகர் அஜித்துடன் இணைந்து இந்த படத்தில் நடிகை திரிஷா, ப்ரியா பவானி சங்கர், நடிகை ரெஜினா, ஆக்சன் கிங் அர்ஜுன், வில்லன் நடிகர் சஞ்சய் தத் என பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கலை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் அஜித்குமார் 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.முதல் திரைப்படம் நடிகர் அஜித்திற்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அடுத்தடுத்து பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் கிட்டை கொடுத்துள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் தனது திரை வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். அவர் பெறாத வெற்றிகளும் இல்லை சந்திக்காத தோல்விகளும் இல்லை இருந்தாலும் ஒவ்வொரு சரிவிலும் அதற்கான காரணத்தை தெரிந்து கொண்டு அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து திரையுலகில் மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து வெற்றிப் பாதையில் வலம் வருகிறார்.

நடிகர் அஜித்திற்கு ஆசை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியையும், நல்ல விமர்சனத்தையும் கொடுத்தது. அதை தொடர்ந்து காதல் கோட்டை காதல் மன்னன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் அஜித் அடுத்ததாக ஆக்சன் ஹீரோவாக மாறிய திரைப்படம் தான் அமர்க்களம். இதுபோல தனது திரை வாழ்க்கையில் பல திருப்புமுனையான படங்களில் நடித்துள்ளார் நடிகர் அஜித். அந்த வரிசையில் பில்லா திரைப்படமும் ஒன்று. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித், ஹீரோயின் நயன்தாரா நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படம் தான் பில்லா. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்டை உருவாக்கிய திரைப்படங்களில் பில்லா திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான பில்லா திரைப்படத்தின் ரீமேக் படமாக அமைந்திருக்கும்.

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆப்பு வைத்த ரசிகர்கள்! ராசி இல்லாத நடிகையாக மாறும் நயன்தாரா!

2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படத்திற்கு முன்பாக அஜித் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் தோல்வியை தழுவி வந்தது. அந்த நேரத்தில் மிக ஹிட்டான ரீமேக் படங்கள் ஒன்றில் நடித்தால் கம்பேக்காக அமையும் என நடிகர் அஜித் நினைத்து வந்த நேரத்தில் பில்லா படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் நடிகர் அஜித்திற்கு தோன்றியுள்ளது. அதே நேரத்தில் அந்தப் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து சம்மதம் வாங்க சென்றுள்ளார் நடிகர் அஜித். அப்போது நடிகர் ரஜினி இந்த படத்தில் நீங்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் ஆனால் அந்த படத்தை உங்கள் ஸ்டைலில் நடிக்க வேண்டும் என ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அந்த ஐடியாவை எடுத்துக்கொண்டு அதன்படி நடிகர் அஜித்தும் பில்லா திரைப்படத்தை முழுக்க முழுக்க அவரின் ஸ்டைலில் நடித்திருப்பார். இந்த படத்தில் மூலம் மிக ஸ்டைலான அஜித்தை நாம் பார்த்திருக்க முடியும். இந்தத் திரைப்படம் நடிகர் அஜித்திற்கு மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.