அண்ணாத்த திரைப்படத்திற்கு முன் ரஜினியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவரின் திரைப்படங்களுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் காத்திருக்கின்றனர். தனது 72 ஆவது வயதிலும் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டி வரும் ரஜினிகாந்த் சமீப காலமாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கிய புதுமுக இயக்குனர்களுடன் இணைந்து இந்த கால ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

அதாவது பா ரஞ்சித் இயக்கத்தில் கபாலி மற்றும் காலா படத்தில் நடித்ததை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம், நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அடுத்ததாக பிரபல இளம் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தனது 171 வது திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து முன்னணி இளம் இயக்குனர்களுடன் ரஜினி இணைந்து படம் நடித்து வருவது அவரின் படங்களுக்கு ஒரு வெற்றி படியாக அமைந்துள்ளது.

இதற்கிடையில் ரஜினிக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் பேட்ட. இந்த திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருப்பார். இவர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் மட்டும் இல்லாமல் வெறியன் என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனைத்து மேடைகளிலும் ரஜினியை புகழ்ந்து பாராட்டியுள்ளார். மேலும் ரஜினி ரசிகன் என்பதை பெருமையாக பல மேடைகளில் கூறியுள்ளார்.

பீட்சா, ஜிகர்தண்டா எனும் இரண்டு படங்களில் கமர்சியலாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் அதை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் பேட்டை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரஜினி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. பழைய படங்களைப் போன்று மிக ஸ்டைலான ரஜினியை இந்த படத்தில் இயக்குனர் காட்டியிருப்பார். மேலும் இந்த படத்தில் பிளாஸ் பேக் காட்சிகளில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். அதன் பின் நடிகை சிம்ரன் உடன் இணைந்து ரஜினிக்கு ஒரு பாடலும் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி அடுத்ததாக படம் நடிக்கவில்லை. அதற்கான காரணத்தை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்.

உருவ கேலி குறித்து தீர விசாரிக்க வேண்டும் என கமலிடம் வேண்டுகோள் வைக்கும் வினுஷா தேவி!

அதில் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்னதாக ரஜினியை இயக்கும் வாய்ப்பு முதலில் கார்த்திக் சுப்புராஜ்க்கு கிடைத்துள்ளது. அப்போது ரஜினிகாந்த் விஸ்வாசம் திரைப்படத்தைப் போல ஒரு கிராமத்து கதை அம்சத்தை கொண்ட திரைப்படத்தில் நடிக்க விரும்பியுள்ளார். அப்பொழுது கார்த்திக்கிடம் அப்படிப்பட்ட கதை இல்லாத காரணத்தினால் அந்த நேரத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினி நடித்துள்ளார். இந்த திரைப்படம் கிராமத்து சூழலில் அண்ணன், தங்கையை மையப்படுத்திய கதையாக அமைந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை ரஜினிக்கு பெற்றுத் தரவில்லை.

இந்த திரைப்படத்திற்கு பதிலாக ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தால் மீண்டும் பேட்ட திரைப்படத்தை போல மாஸ் ஆன ஒரு திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும். மேலும் தற்போது ரஜினியிடம் இரண்டு கதைகள் கூறி இருப்பதாகவும் ரஜினியுடன் மீண்டும் இனிய வாய்ப்புள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews