குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த ரஜினி.. இருந்தும் கே. பாலசந்தர் செஞ்ச தரமான சம்பவம்

இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர்கள் பெரும்புகழ் பெற்று திரையுலகில் அசத்திக் கொண்டிருந்தாலும் தனக்கென தனி இடத்தினைப் படித்து இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் ரஜினி. அபூர்வ ராகங்கள் படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தருக்காக ரஜினி தான் நன்கு வளர்ந்த பிறகு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்தார். இருந்தும் பாலச்சந்தர் ரஜினியிடம் அன்றைய மதிப்பில் அவரது சம்பளத்தினைக் கொடுத்து மீண்டும் தனது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

பாலச்சந்தர் படங்கள் என்றாலே ஜனரஞ்சகமும், சமூகக் கருத்துக்களும், பெண் விடுதலையும் நிரம்பியிருக்கும். அப்படி கமர்ஷியலுடன் சமூக அக்கறையையும் கலந்து கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் சிகரம் 100 படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்திருக்கிறார். குறிப்பாக ரஜினி மற்றும் கமலின் சினிமா வாழ்க்கைக்கு அடுத்த கட்டத்திற்கு வித்திட்டவரும் அவரே.

இந்தப் படத்துக்கு நான் செட் ஆவேனா? தயங்கிய தனுஷூக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்த எழுத்தாளர் பாலகுமாரன்

இந்நிலையில் ரஜினிகாந்த் பாலச்சந்தரின் படங்களில் இருந்து வேறு இயக்குநர்களில் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரம்.. மேலும் அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் நடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பாலச்சந்தரின் படங்கள் அப்போது போதிய வரவேற்பினைப் பெறாமல் இருந்தது. மேலும் அவரது கவிதாலாயா புரடக்ஷனும் அப்போது பண நிர்வாகச் சிக்கல்களால் இருந்தது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அப்போது ஏ.வி.எம்-ன் முரட்டுக்காளை படத்தில் முதன்முதலாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது கே.பாலச்சந்தரிடம் கவிதாலாயா தயாரிப்பு நிர்வாகி நடராஜன் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் தயாரித்தால் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும், நாம் அடுத்தடுத்து படம் இயக்க இந்த கமர்ஷியல் வெற்றி தேவை என்று அந்த ஐடியாவைக் கூறியிருக்கிறார்.

இதற்கு பாலச்சந்தரும் சம்மதம் தெரிவிக்க, ஆனால் அவரின் சம்பளம் அப்போது பலமடங்கு உயர்ந்திருக்கிறது. எனினும் ஏ.வி.எம் சென்று முரட்டுக்காளையில் அப்போதைய ரஜினியின் சம்பளம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டு எஸ்.பி.முத்துராமனை இயக்குநராக வைத்து கவிதாலயா சார்பில் ஒரு படம் தயாரிக்கத் திட்டமிட்டனர். அந்தப் படம்தான் நெற்றிக்கண். மேலும் தொடர்ச்சியாக அவரை வைத்து படம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தப் படத்திற்காக ரஜினி தன்னை வளர்த்துவிட்ட குருநாதரின் நிறுவனத்திற்காக சம்பளம் எப்படி வாங்குவது என்று கேட்கத் தயங்கினாராம். ஆனால் கவிதாலாயா நிறுவனமோ இந்த அட்வான்ஸை வாங்கினால்தான் நாங்கள் படத்தையே தயாரிப்போம். இல்லையெனில் வேண்டாம் என்று கூற மிகவும் தயங்கியபடி அப்போது அவரின் மார்க்கெட் சம்பளத்தினை பெற்றிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் கரு.பழனியப்பன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...