இந்தப் படத்துக்கு நான் செட் ஆவேனா? தயங்கிய தனுஷூக்கு தைரியம் கொடுத்து நடிக்க வைத்த எழுத்தாளர் பாலகுமாரன்

கடந்த 2002 துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தென்னிந்திய சினிமவில் கவனிக்கத் தக்க இயக்குநராக வலம் வருகிறார் செல்வராகவன். தனது தந்தை கஸ்தூரிராஜாவின் மேற்பார்வையில் துள்ளுவதோ இளமை  படத்தினைக் கொடுத்து அப்போதைய இளசுகளை அலைய விட்டவர் தனது அடுத்த படமான காதல் கொண்டேன் படத்தின் மூலம் கவனிக்க வைத்தார்.

யார்ரா இவரு இப்படியும் ஒரு காதல் படம் எடுக்கமுடியுமா என்று கவனிக்க வைத்தவர் மீண்டும் 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் தன்னை ஒரு கைதேர்ந்த இயக்குநராக நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து இவர் எடுத்தபடம் தான் புதுப்பேட்டை. தமிழ் சினிமாவில் எத்தனையோ டான் படங்கள் வந்திருந்தாலும் புதுப்பேட்டை படம் சற்று ஸ்பெஷலானது ஏனெனில் சிறிய வயது இளைஞர் எப்படி சமுதாயத்தால் வீழ்த்தப்பட்டு பின் அதே சமுதாயத்தால் டான் ஆகிறான் என்பது தான் கதை.

இந்தப் படத்திற்கு அப்போது கொண்டாடத திரையுலக ரசிகர்கள் இப்போது கொண்டாடித் தீர்க்கின்றனர். ஏனெனில் அப்போது தனுஷ் ஒரு சில படங்களே நடித்திருந்தார். ஆனால் அதற்குப் பிறகு தனுஷின் சினிமா வளர்ச்சியை வெற்றிமாறன் செதுக்கினார். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை என தனுஷை திரையில் வேறமாதிரி காட்ட அவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர்.

செல்வராகவன் தனது தம்பியை திரையுலகில் அறிமுகப்படுத்தி ஒரு சில ஹிட் படங்களை இயக்கினாலும் அது செல்வராகவன் படமாகவே இருந்தது. ஆனால் தனுஷ் என்னும் அற்புத நடிகனை வெளிக் கொண்டு வந்து அதில் தன் திறமையையும் காட்டி ஹிட் படங்களைக் கொடுத்தவர் வெற்றி மாறன்.

நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?

புதுப் பேட்டை படத்தின் மேக்கிங்கும், பாடல்களும், பின்னனி இசையும் இன்றளவும் பேசப்படுகின்றன. ரீ ரிலீசில் மீண்டும் ஹிட் அடித்தது. யுவன் சங்கர் ராஜா இசையில் கமல்ஹாசன் இந்தப் படத்தில் தனுஷூக்காக ஒரு பாடலைப் பாடியிருப்பார். மேலும் விஜய் சேதுபதியும் ஒரு காட்சியில் நடித்திருப்பார். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட புதுப்பேட்டை படத்தில் முதன்முதலில் நடிக்க தயங்கியிருக்கிறார் தனுஷ்.

ஏனெனில் அப்போதுதான் அவர் வளர்ந்து வந்த நேரம், இப்படி சில படங்களிலேயே ரத்தம், வெட்டுகுத்து, டான் என என்னுடைய வயதிற்கு மீறிய கதாபாத்திரம்போல் தெரிகிறது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்க இந்தப் படத்தின் வசனகார்த்தாவும், பிரபல எழுத்தாளருமான பாலகுமாரன் தனுஷை அழைத்து பசங்க அப்படித்தான் இருப்பாங்க.. நீ இந்தப் படத்தில் நடிக்கலாம்டா.. உன்னைப் போன்ற சிறிய வயது இளைஞர்கள் எப்படி திசைமாறி டான் ஆகின்றனர் என்பதுதான் கதை என்று கூற பாலகுமாரனின் தைரியத்தால் இந்தப் படத்தில் நடித்து முத்திரை பதித்தார் தனுஷ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews