சந்திரா குறிச்சு வச்சுக்க.. இவன்தான் இந்த வருஷம் தமிழ் சினிமாவுல முதல் பிளாக்பஸ்டர் கொடுக்கப் போறான்!

இந்த ஆண்டு தொடங்கி நான்கு மாதங்கள் கடந்த நிலையிலும் தமிழ் சினிமாவில் இதுவரை வசூல் ரீதியாக ஒரு வெற்றி படம் கூட பாக்ஸ் ஆபிஸில் முத்திரையை பதிக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் படத்தை நடிகர் கவின் கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கவினின் ஸ்டார் ரிலீஸ் தேதி:

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் இந்த ஆண்டு முதல் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் ராஜ்கமல் நிறுவனம் வெளியிடவில்லை.

இந்நிலையில், வரும் மே 10ம் தேதி இளன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாகப் போகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் கவின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

star

2024ன் முதல் பிளாக்பஸ்டர்:

ஏற்கனவே யுவன் இசையில் வெளியான ஸ்டார் படத்தின் பாடல்கள் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், அந்த படத்தின் கதையும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு காட்சிகளின் மூலமாகவே தெரியவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இளன் இந்த ஸ்டார் படத்தை இயக்கியுள்ளார். பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய கவின் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

லிப்ட் திரைப்படத்திற்கு பிறகு கவின் நடித்த டாடா திரைப்படமும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த ஆண்டு கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் அதிகபட்சமாக 50 கோடி வசூலை இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு பெரும் வசூலை அந்த படம் குவித்த நிலையில், ஸ்டார் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அயலான், கேப்டன் மில்லர், லால் சலாம், சிங்கப்பூர் சலூன் கடந்த வாரம் வெளியான டியர், ரோமியோ என பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவிய நிலையில், கவினின் ஸ்டார் படமாவது வெற்றி பெறுமா என்பது மே 10ம் தேதி டிக்கெட் புக்கிங் மூலம் தெரிந்து விடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...