கழுத்தை நெரிக்கிற அளவுக்கு கடன் இருக்கு? எப்படி அடைக்க? வாழ்நாள் முழுவதும் உழைச்சாலும் பத்தாதே. நாம இந்த நிலைமையில எங்கே சொத்து சுகம்னு வாங்கறதுன்னு இன்றைய சூழலில் நடுத்தரவாதிகள் புலம்பித் தவிப்பதைப் பார்த்து இருப்போம்.
வருமானம் அதிகமாக வரும்பட்சத்தில் கடன் தேவைப்படாது. குறைவாக இருந்தால் கடன் வாங்கித் தான் காலத்தைக் கழிக்க முடியும். அவர்கள் சொத்தும் வாங்க முடியும். அதற்காக எளிய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. என்னன்னு பார்க்கலாமா…
சில பரிகாரங்கள் செய்யும் போது அதிலும் சாஸ்திரப்படி அவற்றைச் செய்யும்போது அவை நல்ல பலன் அளிக்கும்.
பொதுவாக நாம் நாளைத் தொடங்கும்போது ஏதாவது மந்திரத்தை ஜபித்த பிறகு ஒரு டம்பளர் இளநீர் குடித்தால் ஜெபித்த மந்திரத்தின் பலனை உடனடியாக பெற்றுவிடலாம் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நவதானிய அடையை நல்லெண்ணெய் கொண்டு தயாரித்து சாப்பிட நவக்கிரகங்கள் திருப்தி அடையும். இதனால் அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி தாக்கம் குறையும்.
நம்முடைய கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல், சொந்தம், பந்தம் இவைகளை இழந்தவர்களுக்கு அன்னதானம் அளிப்பது மிகச் சிறந்ததாகும்.
உங்களது முன்னேற்றத்தைக் பார்த்து மற்றவர்கள் விடும் பெருமூச்சு நீங்க உங்கள் வீட்டில் சாம்பிராணி புகை போடுவது நல்லது. புதன் கிழமை அன்று உங்கள் வீட்டிலிருந்து பொன், பொருள் ஆடை இவற்றை எவருக்கும் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் உங்கள் கையில் இருக்கும் மகாலக்ஷ்மி அடுத்தவரிடம் சென்று விடுவாள் என்று சாஸ்திரம் கூறுகிறது.
வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை அன்று நெல், அரிசி, கோதுமை போன்ற உணவுப் பண்டத்தை இனாமாக தரக்கூடாது.
உங்கள் பிரச்சனைகள் நீங்க ஏதாவது பரிகாரம் செய்து வந்தால் தோலால் ஆன செருப்பு, பெல்ட், பர்ஸ் போன்றவற்றை உபயோகிப்பதை நிறுத்திவிடவும். இவைகளை அணிந்து பரிகாரம் செய்தால் அது பலிக்காது. கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனைகள் உள்ளவர்கள் தொடர்ந்து 16 நாட்கள் கோவிலுக்குச் சென்று கொள்ளு தானம் செய்யவேண்டும்.
தொடர்ந்து 43 நாட்கள் கோமியத்தை வீட்டில் தெளித்தால் பீடை நீங்கும். கணவனின் அன்பை முழுமையாக பெற மனைவி விசாக நட்சத்திரத்தில் முருகனையும், வள்ளியையும் வழிபட வேண்டும்.
சுவாதி நட்சத்திரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கொடுத்தது திரும்பி வராது என்று நம்பப்படுகிறது. திருவோணம் அன்று விஷ்ணுவை துளசியால் அர்ச்சனை செய்து துவரம்பருப்பு பாயசம் செய்து அனைவருக்கும் வழங்கினால் சொத்து வாங்கும் யோகம் அமையும்.
மற்றவர்களிடமிருந்து உதவியை சுலபமாகப்பெற மிருகசீரிஷ நட்சத்திரத்தில் முருகப் பெருமானை தரிசித்து உதவி கேட்டால் கிடைக்கும்
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



