பணம் கையில் தங்கவே இல்லையே என இனி கவலை வேண்டாம்..!…இதைச்செய்தால் போதும்…!

Published:

பணம் என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது. இன்னும் இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றும். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பவர்கள் எங்கிருந்து பணத்தை சேர்ப்பது? அவர்களைக் கேட்டால் பணம் வருது. ஆனா…கையில நிக்க மாட்டேங்குது…என்று அங்கலாய்ப்பார்கள்.

நம் வாழ்வில் எதற்காக மிகவும் ஆசைப்பட்டு ஏங்கி ஓடுகிறோமோ அது மட்டும் நம் கையில் இருக்கவே இருக்காது. அப்படி இந்த உலகில் ஓடும் பெரும்பாலானவர்கள் அவர்களின் குடும்பத்தைக் காப்பாற்ற பணத்திற்காக ஒடுகிறார்கள். ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமோ அதற்கு ஏற்ப எதிர்பாராத செலவு வந்து கையில் தங்காமல் போய்விடுகிறது.

இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்றால் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். இதை மட்டும் செய்து வாங்க. அப்புறம் பாருங்க…உங்க கையில பணம் எப்படி புரளுதுன்னு…! என்னன்னு பார்ப்போமா…

நோ கிளாக்..!

பொதுவாக பலரும் தங்கள் வீட்டு பீரோவில் பணம் வைத்து இருக்கும் இடத்தில் கைக்கடிகாரத்தை சேர்த்து வைத்திருப்பார்கள். முதலில், நாம் பணம் வைத்திருக்கும் இடத்தில் கடிகாரம் இருக்கவே கூடாது. அந்த கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் பணமும் அந்த இடத்தில் நிற்காது ஓடிக் கொண்டே இருக்கும்.

Gold watch
Gold watch

நீங்கள் அப்படி வைத்திருக்கும் கடிகாரம் தங்க கடிகாரம் வைரத்தால் செய்யப்பட்ட கடிகாரமாக கூட இருக்கலாம். பணம் இருக்கும் இடம் அருகில் கடிகாரம் வைக்கவே கூடாது.

ஏன் நீங்கள் பணம் வைத்து இருக்கும் பீரோ பெட்டிகள், மேஜை போன்ற பொருட்கள் வைத்திருக்கும் இடத்தின் மேலே மேஜை கடிகாரங்கள் வைப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி நாம் பணம் புழங்கும் ஒவ்வொரு இடத்திலிருந்தும் கடிகாரங்களை பக்கத்தில் வைக்காமல் சற்று தூரமாக வைத்து வர வேண்டும்.

ஏனென்றால், கடிகாரம் 24 மணி நேரம் ஓடிக்கொண்டே இருப்பது போன்று நாம் வைக்கும் இடத்தில் இருக்கும் பணமும் நம்மிடத்தில் தங்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். சைனா போன்ற நாடுகளில் பணம் வைக்கும் இடங்களில் கடிகாரம் வைக்கக் கூடாது என்ற சாஸ்திரத்தை கால காலமாக அவர்கள் பின்பற்றி வருகிறார்களாம்.

தீபம் ஏற்றுங்க…

உங்கள் வீட்டில் பணம் நிலையாக தங்குவதற்கு தீப வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் வீட்டில் என்னதான் விலை உயர்ந்த மின்சார விளக்குகள் பொருத்தி வைத்து இருந்தாலும் காலை மாலை பூஜை செய்து வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது போன்று வரவே வராது.

அதனால் வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் இரண்டு வேளையும் தீபம் ஏற்றி இறைவழிபாடு என்பது தவறாமல் செய்து வரும் பட்சத்தில் வீட்டில் அது ஒரு சுபிட்ஷசத்தை தந்து லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும். இதனால் நம் வீட்டிற்கு வரும் பணம் நம்மிடமே தங்கிக் கொள்ளும்.

பாசிட்டிவ் எனர்ஜி

நீங்கள் ஒரு மின்சார விளக்கு ஏற்றுவதற்கும் வீட்டில் ஒரு அகல் விளக்கு ஏற்றுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஒரு அகல் விளக்கு ஏற்றும் போது அதிலிருந்து உண்டாகும் ஒரு வெளிச்சத்தின் மூலமாக நமக்கு ஒரு நேர்மறை ஆற்றல் (பாசிட்டிவ் எனர்ஜி) உண்டாகும்.

Agal
Agal

இப்படி நீங்கள் விளக்கு ஏற்றும்போது வீட்டில் உள்ள பெண்கள் அவர்களுடைய வாயால் ஸ்வாதகம் என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரித்து விட்டு தீபம் ஏற்றும்போது உங்கள் வீட்டில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்வார்கள்.

அஷ்டலட்சுமியும் ஒரு வீட்டில் குடியிருக்கும் போது அந்த வீட்டில் செல்வத்துக்கு தட்டுப்பாடு இருக்காது. பணம், பொன், பொருள் என அனைத்து செல்வமும் நிறைந்து காணப்படும்.

மேலும் உங்களுக்காக...