நாளை (12.8.2026) ஆடி அமாவாசை. தர்ப்பணம், திதி, அன்னதானம், வழிபாடுன்னு கடற்கரை, நதிக்கரையோர தலங்களில் விசேஷம் களைகட்டும். இதுல அப்படி என்னதான் விசேஷம்? வாங்க பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்.
ஆடி அமாவாசைக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியோ அல்லது ஒரு நாளுக்கு முன்னாடியோ எந்த ஒரு துக்க நிகழ்வு நடந்து இருந்தாலும் தவறாம இந்த அமாவாசை வழிபாட்டைச் செய்யணும் என்பது மரபு.
இது இந்த அமாவாசைக்கு மட்டுமல்ல. புரட்டாசி மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவற்றுக்கும் பொருந்தும். அமாவாசை வழிபாடு செய்றதுனால முன்னோருக்குப் பலனா? நமக்குப் பலனா? இப்படி பலரும் கேட்பதுண்டு.
நாம நல்லாருக்கணும்னு நினைச்ச அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார், பெரியவங்க பெரியப்பா, சித்தப்பா, தாத்தா இந்த மாதிரி நம்மோட உறவுங்கதான் முன்னோர்கள். அவங்களுக்கு நாம மாசத்துல ஒரு நாள் நன்றிக்கடன் செய்ற நாள்தான் அமாவாசை.
இதனால நாம் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் ஒரு பிறவி எடுக்கலன்னா அவர்களுக்கு அது போய் சேருமா? இல்ல அவங்க பிறவி எடுத்துட்டா அவங்களுக்குப் போய் சேராதா? இது யாருக்குப் போய்ச் சேரும்?
இந்த மாதிரி எல்லாம் கேள்விகள் எழுவதுண்டு. இதற்கெல்லாம் நாம் ஆளாக வேண்டாம். நாம நம்ம பெரியவங்களை மதிக்கணும். வயசான காலத்துல அம்மா, அப்பாக்கிட்ட போய் சாப்பிட்டீங்களான்னு கேட்டுப்பாருங்க. அவங்களுக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும்? சாப்பாடு கொடுக்குறீங்க.
அப்புறமா இப்படி கேட்குறீங்கங்கறது எல்லாம் பிரச்சனை இல்லை. சாப்பிட்டீங்களான்னு என் புள்ளை கேட்டுட்டாங்கறதுதான் அவங்களுக்கு சந்தோஷம்.
அப்போ ஒரு நாள் அவங்களுக்காக சாப்பாட்டை வச்சி நீங்க அவங்களை நினைக்கும்போது அவங்க எவ்வளவு சந்தோஷப்படுவாங்க. அல்லது அவர்களுக்கு செய்தோம் என்கிற நிறைவே உங்களுக்கு ஒரு மிகப்பெரிய மன மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் தரும்.
அதனால்தான் பெரியவங்க இந்த அமாவாசையைத் தள்ளக்கூடாதுன்னு சொல்வாங்க. அதுல ஒண்ணுதான் இந்த ஆடி அமாவாசை. இந்த நாளில் தான் முன்னோர்கள் நம்மை வந்து பார்த்துட்டு நமக்கு ஆசிர்வாதம் வழங்கிட்டுப் போவாங்களாம். அதனால்தான் இந்த நாளில் கடற்கரை ஓரங்களில் இருக்குற தலங்களுக்கு ரொம்ப விசேஷம். நதிக்கரை ஓர தலங்களுக்கும் ரொம்ப விசேஷம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



