கமல் படத்தில் இந்தி கிளைமேக்ஸ்… 30 ஆயிரத்திற்கு வாங்கிய இயக்குனர்… எந்த படம் தெரியுமா…?

பொதுவாக ஒரு திரைப்படத்தின் கிளைமாக்ஸை அதிக செலவு செய்து பிரமாண்டமாக எடுப்பது தமிழ் சினிமாவின் பல ஆண்டுகால வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில், உருவான தூங்காதே தம்பி தூங்காதே என்ற படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்ட நிலையில்தான் இந்தி தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் இருப்பதாகவும், அதை தனது படத்தில் பயன்படுத்த முடியவில்லை என்றும், அதை வேண்டுமானால் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

அந்த கிளைமாக்ஸ் தனது படத்துக்கு சரியாக வரும் என்று முடிவு செய்து அதை 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக ராதா மற்றும் சுலக்சனா நடித்திருந்தார்கள். வினு சக்கரவர்த்தி, செந்தாமரை உள்ளிட்டோர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார்கள்.

நடிக்க வருவதற்கு முன்பே திருமணம்.. எம்ஜிஆர்-சிவாஜிக்கு வில்லி.. நடிகை ராஜ சுலோச்சனாவின் திரைப்பயணம்..!!

இளையராஜா இசையில் உருவான இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் போதைக்கு அடிமையான ஒரு கேரக்டர், நல்லவர் என்று ஒரு கேரக்டர் என இரண்டு விதமான கேரக்டர்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இரண்டையும் மிகவும் வித்தியாசமாக அவர் நடித்திருந்தார். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் என்று எஸ்பி முத்துராமன் ஒரு கனவு கண்டு இருந்தார். அப்போதுதான் இந்தி திரைப்பட தயாரிப்பாளர் தான் எடுத்த காட்சிகளை காண்பித்து 50000 ரூபாய் கொடுத்தால் இந்த கிளைமாக்ஸ் காட்சிகளை தந்து விடுகிறேன் என்று கூறினார். அதன் பிறகு பேரம் பேசி அவரிடம் 30000 கொடுத்து அந்த கிளைமாக்ஸ் காட்சியை எஸ்பி முத்துராமன் வாங்கினார்.

நடந்து வந்தாலே நகைச்சுவை.. நடிகர் உசிலைமணியின் திரைப்பயணம்..!!

அது நான்கு கார்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதை ஒரு ஹெலிகாப்டர் துரத்திக் கொண்டிருக்கும் காட்சி படமாக்கப்பட்டு இருக்கும். கிட்டத்தட்ட 15 நிமிடம் உள்ள அந்த காட்சியை வாங்கிய எஸ் பி முத்துராமன் அதில் கமல்ஹாசன் மற்றும் ராதா சுலக்ஷனா ஆகியோர்களை வைத்து சில காட்சிகள் படமாக்கி அதில் இணைத்து விட்டார்.

தூங்காதே தம்பி தூங்காதே படத்திற்காக எடுத்த கிளைமாக்ஸ் எது? ஹிந்தி பட தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய கிளைமாக்ஸ் எது? என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எடிட்டிங் செய்யப்பட்டது. கிளைமாக்ஸ் காட்சியை மிகவும் திறமையாக விசு திரைக்கதை எழுதியிருந்தார். எது இந்தி பட காட்சி என்று படக்குழுவினர்களுக்கே தெரியாத அளவுக்கு எடிட்டிங் செய்த பிறகு தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் யாராலும் இதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

ரஜினி ஹீரோவாக நடித்த படம்.. ஆனால் டைட்டிலில் வில்லன் பெயர் தான் முதலில்.. எப்படி ஒப்புக்கொண்டார்?

இந்த படத்திற்காகவே அதிக செலவு செய்து ஹெலிகாப்டர் மற்றும் நான்கு கார்களை வைத்து கிளைமாக்ஸ் எடுத்ததாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டனர். இன்றும் இந்த படத்தை தொலைக்காட்சியிலோ அல்லது ஆன்லைனில் பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மிகவும் திறமையாக எஸ்பி முத்துராமன் இயக்கியிருப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...