மாசி மாதத்தில் மாசி மகம் போன்று உள்ள வேறு சில முக்கிய நாட்கள்….

நாம் சில நாட்களாகவே மாசி மாதத்தின் சிறப்புகள் பற்றி தான் பார்த்துக் கொண்டு வருகிறோம். மாசி மாதம் நீராடுவதற்கு புனித மாதம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதாவது மாசி மகத்தின் போது புனித நீராடுவதை தான் சொல்கிறேன். இந்த மாசி மகாமகம் போன்றே இந்த மாசி மாதத்தில் சில முக்கிய நாட்கள் உள்ளன. அவற்றைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

முதலில் மாசி அமாவாசையின் சிறப்புகள் பற்றிப் பார்ப்போம். இந்த மாசி அமாவாசை நம் முன்னோர்களுக்கு படையலிட்டு வணங்குவதற்கு மிகவும் ஏற்ற நாள். நம் மீது நம் முன்னோர்கள் கோபத்தில் இருந்தாலும் இந்த நாளில் அவர்களை வணங்குவதன் மூலம் அவர்கள் கோபம் தனிந்து நமக்கு ஆசிகளை தருவார்களாம். மேலும் இந்நாளில் தர்ப்பணம் போன்ற காரியங்களை செய்வதன் மூலம் பித்ருதோஷத்திலிருந்து விலகலாம்.

அடுத்தது மாசி சந்திர தரிசனம். இந்த சந்திர தரிசனம் தான் மூன்றாம் பிறையாகும். ஏனெனில் இந்த பிறை தான் சிவபெருமானின் திருமுடியில் உள்ள பிறையாம். எனவே இது தெய்வீகப் பிறை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த பிறையைப் பார்க்கும்போது நம் மனதில் உள்ள அனைத்து சங்கடங்களும் நீங்கி மனம் மகிழ்ச்சி பெருமாம். மேலும் இதனை பார்ப்பதன் மூலம் குழப்பம் எல்லாம் நீங்கி மனம் தெளிவு பெரும்.

Published by
Staff

Recent Posts