பருத்திவீரன் படத்துக்கு சம்பளம் வாங்கல.. நெருக்கடி கொடுக்க விரும்பல.. கவிஞர் சினேகன் பகிர்ந்த தகவல்..!!

Snehan: அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வெளியான திரைப்படம் பருத்திவீரன். தற்போது பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலமாகத்தான் நடிகராக திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இந்த ஹிட் பாட்டெல்லாம் இவங்க எழுதியதா? இது தெரியாமப் போச்சே..!

இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களையும் கவிஞர் சினேகன் தான் எழுதி இருந்தார்.

இந்தப் படம் பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை ஆரம்பத்தில் தயாரிக்க வந்த ஞானவேல் ராஜா இடையில் விட்டு விட்டதால் படத்தை எடுத்து முடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்பட்டது.

கோட்டை முதல் குமரி வரை.. சினேகன் பாடல் வரிகள்.. விஜயகாந்த் என்ன சொன்னார் தெரியுமா..!!

ஆனால் இது அனைத்தையும் தாண்டி திரையரங்கில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்திற்கு விருதுகளும் கிடைத்தது. இந்நிலையில் பாடல் வரிகள் எழுதிய சினேகன் பேட்டி ஒன்றில் இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அப்போது பேசிய அவர் பருத்திவீரன் படத்தில் தான் எழுதிய எந்த பாடலுக்கும் சம்பளம் வாங்கவில்லை என்று கூறியுள்ளார். அப்போது அந்தப் படம் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்ததால் தானும் சம்பளம் கேட்டு கூடுதல் நெருக்கடியை கொடுக்க வேண்டாம் என்று நினைத்ததாக அவர் பகிர்ந்துள்ளார்.

ஒரு பாடலை பத்து நாள் எடுத்தார்.. அமீர் இப்படிதான் பண்ணுவார்.. அம்மா நடிகை சரண்யா பகிர்ந்த தகவல்..!!

இயக்குனர் அமீர் சினேகனுக்கு சம்பளம் போகல என்னன்னு கேட்டு வையுங்க கொடுத்து விடலாம் என்று கூறியுள்ளார். அந்த சமயத்தில் சிநேகனும் நெருக்கடியில் தான் இருந்துள்ளார். ஆனாலும் படக்குழுவுக்கு பணம் கொடுத்து உதவ உதவ முடியாது ஆனால் கூடுதல் சிரமம் கொடுக்காமல் இருக்க முடியும் என்று இப்படி முடிவெடுத்துள்ளார். இந்த விஷயத்தை சினேகன் இதற்கு முன்பு எங்கேயும் பகிர்ந்ததில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews