விமானத்திற்குள் பாம்பு. அவசரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி!

மலேசியாவில் வானில் பறந்த விமானம் ஒன்றில் பாம்பு இருந்த காரணத்தால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து ஒரு உள்ளூர் விமானம் கிளம்பியுள்ளது. விமானம் கிளம்பி சிறிது நேரத்தில் விமானத்தில் பயணித்த பயணிகள் கத்திக் கூச்சலிட்டு உள்ளனர்.

ஏன் என விமானப் பணிப் பெண்கள் ஓடிச் சென்று விசாரிக்கையில் விமானத்தில் பயணிகளுக்கு வெளிச்சம் கொடுக்கும் வகையிலான லைட் ஒன்று பயணிகளின் தலைக்கு மேல் இருக்கும்.

அந்த விளக்கின் அருகே பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்து பயணிகள் அலறுவதாகக் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் விமானிக்கு தெரியவர பயணிகளின் நலன் கருதி விமானத்தை உடனடியாகத் தரையிறக்க முடிவு செய்தனர்.

விமானி விமானத்தை செரவாக் பகுதி அருகே தரையிறக்கி உள்ளார், விமானத்தில் பாம்பு இருந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.