SK21 டைட்டில் அப்டேட் வெளியிட்ட படக்குழு! உலக நாயகனுடன் கூட்டணி!

சிவகார்த்திகேயன் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு சிறந்த உதராணம். தனக்கு விருப்பமான ஒன்றில் தொடர்ந்து நம்பிக்கையுடன் உழைத்ததற்கான பலனை இன்று அடைந்துள்ளார்.

2007ம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கிய இவரது பயணம் இன்று உச்சத்தை அடைந்துள்ளது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளாராக இருந்த சிவகார்த்திகேயேன் தனது துருதுரு பேச்சால் அனைவரையும் ரசிக்க வைத்தார்.

ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் இவர் கொடுக்கும் கவுண்டர்கள் குபீர் என சிரிக்க வைக்கும். அந்த வேலையில் இருக்கும் போதே மற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

மிமிக்ரி செய்வதில் வல்லவரான இவர். எல்லா நடிகரையும் போல பேசும் திறன் கொண்டவர். பேசுவது மட்டுமல்லாமல், மற்றவர்களை இமிட்டேட் செய்து காட்டும் திறனும் இருந்தது. தொலைக்காட்சியிலேயே காலம் உருண்டு போக, அடுத்து சினிமாவை நோக்கி போவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன்.

அப்போதுதான் ‘மெரினா’ படத்திற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது அந்த படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளம் ரூ.10,000. சினிமா வாய்ப்பு கிடைத்ததே பெரும்பாடு. இதில் சம்பளத்தை எல்லாம் கவனத்தில் கொள்ளக்கூடாது என்பதை நன்கு அறிந்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அதனால், கிடைக்கும் வாய்ப்புகளை மட்டும் தவறவிடாமல், பயன்படுத்த வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தார். அப்போது நடிகர் தனுஷின் நட்பு கிடைக்க ‘3’ படத்தில் நண்பனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. மெரினாவில் கதாநாயகனாக நடித்தாலும், பரவாயில்லை காமெடியனாக நடிப்போம் என்று நடித்துள்ளார்.

அதன் பிறகு, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என தொடர் ஏறுமுகமாக அமைந்தது. சினிமாவில் உச்சத்தை அடைந்ததும் சில படங்களை தயாரித்தும் உள்ளார். இதில் அவர் நடித்த டாக்டர், டான் படங்களும் அடங்கும். ஒரு சில படங்களில் பாடல் பாடுவதையும், பாடல் எழுதுவதையும் ஒரு பக்கம் செய்து வருகிறார்.

sivakarthikeyan 3

சமீபத்தில் அவர் நடித்து ஹிட் ஆன படம் ‘மாவீரன்’. ‘அயலான்’ படம் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த நிலையில், பொங்கலுக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

தற்போது உலக நாயகன் ‘கமல்ஹாசனின்’ ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ‘SK21’-வை தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தபடத்தின் டைட்டில் தீபாவளி அன்று வெளியாகும் என புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews