சிகப்பு ரோஜாக்கள் படத்தில் தவறாக சீன் எடுத்த பாரதிராஜா.. மூடி மறைத்து ஹிட் கொடுத்த ரகசியம்

கிராமத்துப் படங்களையே இயக்கி வந்த பாரதிராஜா முதன் முதலாக த்ரில்லர் படம் ஒன்றை எடுக்கத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட படம் தான் சிகப்பு ரோஜாக்கள். அதுவரை காதல் இளவரசனாக ஜொலித்த கமல்ஹாசனை ஆண்ட்டி ஹீரோவாக மாற்றி கமலுக்கு சைக்கோ கதாபாத்திரம் கொடுத்து அதையும் ஹிட் ஆக்கியவர் பாரதிராஜா. கமல்-ஸ்ரீதேவி காம்பினேஷன் இந்தப் படத்திலும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியது.

இந்தப் படம் எடுக்கும் போது சில காட்சிகளை எடுத்துவிட்டு பார்க்கும் போது மிகப்பெரிய லாஜிக் மிஸ் ஆனது தெரியவந்தது. அந்த இடத்தில் தான் இயக்குநர் தனது திறமையைக் காட்டினார். சிகப்பு ரோஜாக்கள்’ படம் பார்த்தீர்களென்றால், அதில் மிகப்பெரிய டெக்னிக்கல் மிஸ்டேக் இருக்கும். இதுவரை எவர் கண்ணிலும் படவில்லை. படத்தில் பாக்யராஜ் தன்னை அடையாளம் சொல்லிவிடுவார் என்று கமல் உணர்ந்துகொள்வார். ‘இன்றிரவு உன்னுடன் தான்’ என்பது போல் ஸ்ரீதேவியிடம் சொல்லிவிட்டு, கமல் பாக்யராஜைப் பார்க்க கிளம்புவார்.

அன்றிரவு. ஸ்ரீதேவி தனியே இருப்பார். ஜன்னல் வழியே பார்ப்பார். மழை பெய்யும். அதை வேடிக்கை பார்ப்பார். பொம்மையைத் தொட்டுப் பார்ப்பார். இங்கே போவார். அங்கே போவார். வீட்டில் தனியே இருக்கும் பெண்ணின் உணர்வுகளை ஸ்ரீதேவி நடிப்பில் அசாத்தியமாக கடத்தியிருப்பார்.

ஏ.ஆர்.ரஹ்மானை விட குறைந்த வயதில் இசையமைப்பாளராக மாறிய பிரபலம்.. யேசுதாஸை அறிமுகப்படுத்திய ஜாம்பவான்

ஜன்னல் வழியே பார்ப்பார். மழை விட்டிருக்கும். புல்வெளியைப் பார்ப்பார். பூமிக்குள்ளிருந்து தண்ணீர் பீய்ச்சி வந்துகொண்டிருக்கும். பைப் ஏதேனும் உடைந்துவிட்டதா என்று பார்ப்பார். அப்போது பூமிக்குள்ளிருந்து ஒரு கை வெளியே வரும். புதைக்கப்பட்ட உடலிலிருந்து ஒரு கை வெளியே வரும். ‘பம்… பம்… பம்…’ என்று இளையராஜாவின் பின்னணி அந்தக் காட்சிக்கு உயிர் கொடுக்கும்.

அப்படியே பயந்து கதறி, ஓடி, எங்கே போகிறோம் என்றே தெரியாமல் ஒரு அறைக்குள் ஓடிச் சென்று விழுவாள். அந்த அறையை மட்டும் கமல் காட்டியிருக்கமாட்டார். அந்த அறைக்குள் சென்று அங்கே இருக்கும் பொருட்கள், எழுதப்பட்ட வாசகங்கள், இளம் வயது திலீப்பின் புகைப்படம் (கமலின் பெயர் திலீப்). ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கும். அதன் பின்னர் ஒரு இடத்தில் ப்ளாஷ்பேக் முடியும்.

அஜீத், விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநர் எழில்… இதெல்லாம் இவர் படங்களா?

இதில் என்ன லாஜிக் மிஸ்டேக் தெரியுமா?
திலிப்பீன் இளமைக் காலம், என்ன நடந்தது என்பதெல்லாம் திலீப்பின் பார்வையில் இருந்துதானே ப்ளாஷ்பேக்காக விரியவேண்டும். ஸ்ரீதேவிக்கு எப்படி இளமை விஷயங்கள், அந்தந்த கேரக்டர்கள் தெரியும்? ஆனால், சாமர்த்தியமாக திரைக்கதையில் அதை தெரியாமல் பார்த்துக் கொண்டார் பாரதிராஜா. இதுதான் சினிமாவின் வெற்றி. ஏமாற்றுவேலையால் ‘சிகப்பு ரோஜாக்கள்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.